பெண்ணை தாக்கியதாக சிதம்பரம் கோயில் தீட்சிதர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

பெண்ணை தாக்கியதாக சிதம்பரம் கோயில் தீட்சிதர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
Updated on
1 min read

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண்ணை தாக்கியதாக தீட்சிதர் மீது போலீ ஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த செல்வகணபதியின் மனைவி லதா (51). காட்டுமன்னார் கோவில் அருகே ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகி றார். இவர் தனது மகன் ராஜேஷ் (21) பிறந்த நாளையொட்டி நேற்று முன்தினம் இரவு நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த சிதம்பரம் வடக்கு வீதியைச் சேர்ந்த கணேச தீட்சிதர் மகன் தர்ஷன் என்கிற நடராஜ தீட்சிதரிடம் (25) தனது மகனுக்கு பிறந்தநாள் எனக் கூறி பூஜை சாமான்களை கொடுத்துள்ளார். இதையடுத்து அவர், பூஜை செய்து பூஜை தட்டை லதாவிடம் கொடுத்து உள்ளார்.

அப்போது, பெயர், நட்சத்திரம், ராசி ஆகியவற்றை கேட்காமல் பூஜை செய்ததாக லதா ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், லதாவின் கன்னத்தில் நடராஜ தீட்சிதர் அறைந்ததாக தெரிகிறது. அங்கிருந்தவர்கள் லதாவை மீட்டதோடு, தீட்சிதரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

இதையடுத்து லதா சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தகவலறிந்த சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் போலீஸார் தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அரசு மருத்துவமனைக்கு சென்று லதாவிடம் விசாரணை செய்தனர். அப்போது லதா, கோயிலில் நடந்தது குறித்து புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து நடராஜ தீட்சிதர் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசி யது, மிரட்டல் விடுத்தது, பெண் கள் வன்கொடுமை ஆகிய 3 பிரிவு களில் வழக்குப் பதிவு செய்த தோடு, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in