

கடந்த சில வாரங்களாக மின் னொளியில் ஜொலித்த மாமல்ல புரம் கலைச் சிற்பங்கள் மீண்டும் இருளில் மூழ்கத் தொடங்கியுள் ளன. இதை உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
கடந்த மாதம் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்புக்குப் பிறகு மாமல்ல புரம் பகுதியே புத்தொளி பெற் றது. இதைத் தொடர்ந்து சுற்று லாப் பயணிகள் வருகையும் அதிகரித்தது. ஒளி வெள்ளத்தில் கலைச் சின்னங்களை ஆர்வத் துடன் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வந்தனர்.
சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
தற்போது ஒரு சில விளக்குகள் மட்டுமே எரிகின்றன. இதை மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக மும், தொல்லியல் துறையும் இணைந்து சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு தேவையான உதவி களை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என சுற் றுலாப் பயணிகள் வலியுறுத்து கின்றனர்.