

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினரை திமுகவினர் தொட்டால் தக்க பதிலடி கொடுக்குமாறு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது சர்ச்சைக்குள்ளானது.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிப்புத்தூரில் கட்சியினர் மத்தியில் பேசிய போது, உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற அனைத்து சித்து வேலைகளையும் செய்வேன் என்றார்.
அந்தக் கூட்டத்தில் அவர் பேசும்போது, “அண்ணாதிமுக காரன் சட்டையைத் தொட்டாங்கன்னா திமுக காரன் சட்டையைக் கிழிக்கணும். நம்ம வீட்டுக் கதவை திமுக காரர் தட்டினால் திமுக காரர் வீட்டுக் கதவை உடைக்கணும், இதனால் என்ன வந்தாலும் எதுவந்தாலும் நான் பார்த்த்துக்கறேன். பின்னணியில் நான் முழுக்க முழுக்க நிற்பேன்.
இங்கு செயிக்கறதுக்கு என்னென்ன வழி இருக்கோ அத்தனை சித்து விளையாட்டுக்களையும் விளையாடுவேன்” என்றார் ராஜேந்திர பாலாஜி