காரைக்குடி தொழிலதிபர் வீட்டில் 250 பவுன், ரூ.5 லட்சம் கொள்ளை: நாய்க்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளையர்கள் கைவரிசை

காரைக்குடி மகர்நோன்பு பொட்டல் பகுதியில் கொள்ளை நடந்த தொழிலதிபர் இளங்கோமணியின் வீடு.
காரைக்குடி மகர்நோன்பு பொட்டல் பகுதியில் கொள்ளை நடந்த தொழிலதிபர் இளங்கோமணியின் வீடு.
Updated on
1 min read

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம், காரைக் குடியில் தொழிலதிபர் வீட்டில் 250 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளது.

காரைக்குடி செக்காலை ரோட் டில் ஜவுளிக் கடை நடத்தி வருபவர் இளங்கோமணி. இவரது வீடு மகர்நோன்பு பொட்டல் பகுதியில் உள்ளது. தீபாவளி வியாபாரம் முடிந்த நிலையில், இளங்கோமணி, தனது குடும்பத்துடன் கடந்த நவ. 7-ம் தேதி தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குத் திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 250 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் உள் ளிட்டவை கொள்ளை அடிக்கப் பட்டு இருந்தன. தகவல் அறிந்த டிஎஸ்பி அருண், இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப் பட்டன. இந்தக் கொள்ளை குறித்து காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கொள்ளையர்கள் வீட்டில் பாது காப்புக்கு இருந்த நாய்க்கு மயக்க மருந்து கலந்த சாப்பாட்டை கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்டு நாய் மயங்கி விழுந்ததும், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென் றுள்ளனர். பல மணி நேரம் உள் ளேயே தங்கி இருந்து, ஒவ்வொரு அறையாகச் சென்று அங்குலம் அங்குலமாகத் தேடி நகைகள், பணத்தைக் கொள்ளை அடித்திருப் பது தெரிய வந்தது.

அருகில் உள்ள வீடுகளில் சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். ஆனால், அதில் பதிவுகள் சரியாகத் தெரியாததால் கொள்ளை நடந்த நாள் குறித்த விவரம் சரிவரத் தெரியவில்லை. போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in