

தஞ்சாவூரில் இன்று வ.புகழேந்தி தலைமையில் அமமுக போட்டிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அதிமுகவில் ஜெயலலிதா இருந்தபோது பெங்களூருவில் அக் கட்சியின் கர்நாடக மாநில பொறுப் பாளராக இருந்தவர் வ.புகழேந்தி. ஜெயலலிதா, சசிகலாவின் சொத் துக்குவிப்பு வழக்கின்போது, அவர் களது வழக்குக்கு பெரும் உதவி யாக இருந்தவர். பின்னர் அதிமுக வில் இருந்து பிரிந்து அமமுக உரு வாக முக்கியமானவர்களில் ஒருவ ராக இருந்த புகழேந்தி, அக்கட்சி யின் செய்தித் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அமமுகவின் பொதுச் செயலாளர் தினகரனுக்கும், புகழேந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அக்கட்சியில் இருந்து விலக முடிவெடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக கோவை, சேலம் மண்டலத்தில் புகழேந்தி, அமமுகவின் அதிருப்தியாளர் களை ஒன்றிணைத்து போட்டி அமமுக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், தினகரனின் சொந்த ஊரான தஞ்சாவூர் மண்ட லத்தில் அமமுகவின் போட்டிக் கூட்டத்தை நடத்தி, அக்கட்சியின் அதிருப்தியாளர்களை ஒன்றி ணைக்க புகழேந்தி முடிவு செய்துள் ளார். இதற்காக இன்று (நவ.17) தஞ்சாவூர் ஸ்டார் ரெசிடென்சி ஹோட்டலில் காலை 11 மணியள வில் புகழேந்தி தலைமையில் ஆலோ சனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், சில முக்கிய முடிவு களை எடுக்க உள்ளதாக அமமுகவின் அதிருப்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.