சொத்து உரிமையாளர் - வாடகைதாரர் ஒப்பந்தம்: காலக்கெடுவை மேலும் ஓராண்டு நீட்டித்து அவசர சட்டம் - தமிழக அரசு பிறப்பித்தது

சொத்து உரிமையாளர் - வாடகைதாரர் ஒப்பந்தம்: காலக்கெடுவை மேலும் ஓராண்டு நீட்டித்து அவசர சட்டம் - தமிழக அரசு பிறப்பித்தது
Updated on
1 min read

சொத்து உரிமையாளர் - வாடகைதாரர்கள் இடையில் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான காலக்கெடுவை மேலும் ஓராண் டுக்கு நீட்டித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு சொத்து உரிமை யாளர்கள், வாடகைதாரர்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்தும் சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின்படி, சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன், சொத்து உரிமையாளரும் வாடகைதாரரும் வாடகை தொடர்பாக எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் எதுவும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை எனில், சட்டம் நடைமுறைக்கு வந்த நாளில் இருந்து 90 நாட்களுக்குள் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாடகைதாரர் கள், சொத்து உரிமையாளர்கள் இந்த காலக்கெடுவை நீட்டிக்கக் கோரினர். அதன்படி, காலக் கெடுவை 4 மாதங்கள் நீட்டிக்க முடிவெடுத்த அரசு, கடந்த மே.22-ம் தேதி இதுதொடர்பாக அவசர சட்டம் பிறப்பித்தது. அப் போது சட்டப்பேரவை கூட்டம் இல்லாததால், ஜூலை மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் இச்சட்டத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

வரும் கூட்டத்தொடரில் ஒப்புதல்

இந்நிலையில், ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான காலக் கெடுவை மேலும் 12 மாதங்கள் நீட்டித்து கடந்த அக்டோபர் 21-ம் தேதி அவசர சட்டம் பிறப் பிக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதற்கான ஒப்புதல் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in