Published : 17 Nov 2019 11:04 AM
Last Updated : 17 Nov 2019 11:04 AM

காலனி ஆதிக்க நாடுகளின் மறைமுக வரி சுரண்டலைத் தடுக்க சர்வதேச வரிவிதிப்பு கொள்கையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்: ஜமைக்கா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தல் 

காலனி ஆதிக்க நாடுகளின் மறைமுக வரி சுரண்டலைத் தடுக்க சர்வதேச வரி விதிப்பு கொள்கையில் சீர்திருத்தம் தேவை என ஜமைக்கா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பைரன் ஸைக்ஸ் அறிவுறுத்தினார்.

நெதர்லாந்தை தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் சர்வதேச நிதிக்கழகத்தின் 13-வது வருடாந்திர சர்வதேச 2-நாள் மாநாடு சென்னையில் நடந்தது. சர்வதேச நிதிக்கழக தென் மண்டல சென்னை பிராந்திய தலைவர் பி.ராமகிருஷ்ணன் வரவேற்றார். துணைத்தலைவர் டி.ஜி.சுரேஷ் முன்னிலை வகித்தார். இந்திய துணைத்தலைவர் பி.வி.எஸ்.எஸ்.பிரசாத் தலைமை வகித்தார்.

மாநாட்டை தொடங்கி வைத்து ஜமைக்கா நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பைரன் ஸைக்ஸ் பேசியதாவது:

இந்தியாவுக்கும் ஜமைக்காவுக் குமான தொடர்பு நீண்ட நெடுங் காலம் உடையது. அரிசி, மாம் பழம், பலாப்பழம், மஞ்சள் என பல பொருட்கள் பரஸ்பர பரிவர்த் தனையில் உள்ளன. டிஜிட்டல்மயம் காரணமாக சர்வதேச வரி விதிப்பு கொள்கையில் புதிய சீர் திருத்தங்கள் தேவைப்படுகிறது. உலக வணிக சந்தையில் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பங்களிப்பு அபரிமிதமாக உள்ளது. இதை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் சர்வதேச வரிவிதிப்பில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றன.

காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட நாடுகள் இதுபோன்ற மறைமுக வரி சுரண்டலையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் ஐரோப்பிய நாடுகளின் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருவதால் வரிவருவாய் மூலத்தைப் பெருக்க அந்த நாடு கள் மற்ற நாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற் பட்டுள்ளது. இதனால் அமெரிக் காவில் உள்ள நிறுவனம் உலகம் முழுவதும் தனது வியாபாரத்தை டிஜிட்டல் ஆன்லைன் வடிவில் மேற்கொண்டாலும், எந்த நாட்டில் வணிகம் செய்கிறதோ அங்கு வரி செலுத்த மறுக்கிறது.

நாம் நம்முடைய வரலாற்றை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இந்நிலை மாற வேண்டும் எனில் சர்வதேச வரிவிதிப்பு மற்றும் பணப்பரிமாற்ற கொள்கைகளில் பல்வேறு புதிய பரிணாமங்களை அடைய வேண்டும். சர்வதேச நிதிக்கழகம் அதற்கான நடவடிக் கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

89 ஆயிரம் வழக்குகள்

மாநாட்டில் பங்கேற்ற இந்திய வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தலைவர் பி.பி.பட் பேசும்போது, ‘‘வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சர்வதேச நிதி கழகத்துடன் இணைந்து இதுபோன்ற மாநாடு களை நடத்துவதன் மூலம் சர்வதேச வரிவிதிப்பிலும் நிபுணத்துவம் பெற்ற தீர்ப்பாய உறுப்பினர் களை உருவாக்க முடிகிறது’’ என்றார்.

இந்நிகழ்வில் வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத் துணைத் தலைவர்கள் வி.வாசு தேவன், ஜி.எஸ்.பண்ணு மற்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான பி.ராஜேந் திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x