

உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த படி உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழா நேற்று நடை பெற்றது. இதில் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து செய்தி யாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட இருப்பது தொடர்பான வழக்கில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த வழக்கில் தான் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்ட தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனால் தமிழகத்துக்குப் பின்னடைவு இல்லை. பிரதான மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளது. அந்த வழக்கில், தமிழக அரசு தரப்பின் நியாயங்கள் எடுத்துரைக்கப்பட்டு, அணையை கட்டக்கூடாது என வாதங்கள் வைக்கப்படும்.
மத்தியில் 14 ஆண்டுகள் ஆட்சி யில் அங்கம் வகித்த திமுகவால், தமிழகத்துக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. தமிழகத்தின் பல உரிமைகள் பறிபோயின. நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுக வும், காங்கிரஸும்தான். இதை உயர் நீதிமன்றமே சுட்டிக்காட் டியுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு அதிமுக அரசுதான் காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது வேடிக் கையாக உள்ளது. நீட் தேவை யில்லை என்பதுதான் தமிழக அரசின் கொள்கை. அதில் நாங்கள் உறுதியாக இருப்போம்.
தமிழகத்தில் 37 மக்களவைத் தொகுதிகளில் தற்காலிக வெற்றி பெற்ற திமுக, பின்னர் வந்த தேர்தல்களில் பின்னடைவைச் சந்தித்தது. அதனால் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக தயங் குகிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளால் திமுக தான் பீதி அடைந்துள்ளது. அதிமுகவுக்கு உள்ளாட்சி தேர் தலை எதிர்கொள்ள பயம் இல்லை. உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்த படி உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்தும். தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.