35 ஆண்டுகளாக பராமரிப்பில்லாத மரக்காணம் பக்கிங்ஹாம் கால்வாயில் ஆய்வு: சென்னை குடிநீர் தேவைக்காக சீரமைக்கத் திட்டம் 

மரக்காணம் பக்கிங்ஹாம் கால்வாய் தடுப்பணையை ஆய்வு செய்யும் தமிழ்நாடு நதிநீர் பாதுகாப்புக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சத்யகோபால், விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணியன்.
மரக்காணம் பக்கிங்ஹாம் கால்வாய் தடுப்பணையை ஆய்வு செய்யும் தமிழ்நாடு நதிநீர் பாதுகாப்புக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சத்யகோபால், விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணியன்.
Updated on
1 min read

விழுப்புரம்

மரக்காணம் பக்கிங்ஹாம் கால்வாய் அருகில் கந்தாடு, வட அகரம், வண்டிப்பாளையம், தேவிகுளம், ஆத்திக்குப்பம், காளியாங்குப்பம், கூனிமேடு, செய்யாங்குப்பம், கோட்டிக்குப்பம், ஊரணி உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இங்கு சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், மணிலா, தர்பூசணி, தென்னை, கேழ்வரகு, கரும்பு போன்ற பயிர்கள் நடவு செய்யப்படுகின்றன. இப்பகுதியில் சிறப்பாக நடைபெற்று வந்த விவசாய தொழில், தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைதல், விளைநிலம் உவர் நிலமாக மாறுதல் போன்ற காரணங்களால் நலிவடைந்துள்ளன.

இங்குள்ள பக்கிங்ஹாம் கால் வாயில் கந்தாடு ஊராட்சிக்குட்பட்ட முதலியார்பேட்டைக்கும், மரக் காணம் பேரூராட்சிக்குட்பட்ட காக் காப்பள்ளம் கிராமத்துக்கும் இடைப் பட்ட பகுதியில் கால்வாயின் குறுக்கே 50-க்கும் மேற்பட்ட கதவு கள் அமைத்து சுமார் 150 ஆண்டுக்கு முன் ஆங்கிலேயர் காலத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

இப்பகுதியில் ஒவ்வொரு மாத மும் அமாவாசை மற்றும் பவுர் ணமி நேரங்களில் கடல் நீரானது முகத்துவாரம் வழியாக பக்கிங் காம் கால்வாய்க்கு செல்கிறது. இந்த உப்பு நீரானது விளை நிலங்களில் கலக்காமல் இங்குள்ள தடுப்பணையிலேயே தடுத்து நிறுத் தப்படும். மேலும், மழை காலத்தில் நீரானது வீணாக கடலில் சென்று கலக்காமல் தடுப்பணையின் தெற்கு பகுதியில் பாதுகாப்பாக தடுத்து நிறுத்தப்படுவது வழக்கம்.

நிலத்தடி நீர்மட்டம் உயரும்

இதுபோல் தடுத்து நிறுத்தப்படும் மழைநீரால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து விடும். மேலும் இந்த நீரையே பல கிராமங்களில் இருக்கும் விவசாயிகள் தொட்டி ஏற்றம் மூலம் விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஆனால், இவ்வளவு சிறப்பு மிக்க தடுப்பணையை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சரி யான பராமரிப்பில்லாததால், தடுப் பணை முற்றிலும் சிதிலம் அடைந் துள்ளது.

மரக்காணம் பக்கிங்ஹாம் கால்வாயில் பராமரிப்பு இல் லாமல் சேதம் அடைந்துள்ள தடுப்பணையை சரிசெய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

நன்னீராக மாற்ற ஆய்வு

இந்நிலையில் நேற்று மரக் காணம் அருகே கந்தாடு மற்றும் வண்டிப்பாளையம் ஆகிய இடங் களில் கழுவேலி ஏரியில் தேங்கி நிற்கும் நீரை நன்னீராக மாற்றி, சென்னை மாநகர் பொதுமக்களுக்கு குடிநீர் பயன்பாட்டுக்காக கொண்டு செல்வதற்கான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணி யன் தலைமையில் தமிழ்நாடு நதிநீர் பாதுகாப்பு கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சத்யகோபால் இந்த ஆய்வை மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் திண்டிவனம் சார் ஆட்சியர் அனு, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் ஜவகர், தமிழ்நாடு நதிநீர் பாது காப்பு கழக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in