

பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை கள் அமைத்திருப்பதை பாராட்டும் வகையில் புதுடெல்லியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் குளோபல் ஸ்மார்ட் சிட்டிஸ் ஃபோரம் சார் பில் சென்னை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் 119 தொடக்கப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளி கள், 38 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 200 பள்ளிகளில் மழலையர் வகுப் புகளும் நடைபெற்று வருகின்றன. அனைத்து பள்ளிகளிலும் மொத்தம் 83 ஆயிரம் மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி களில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் உருது மொழிவழிக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளிகளின் தேர்ச்சி விகி தத்தை அதிகரிக்கவும், மாணவ மாணவியரின் சேர்க்கையை அதி கரிக்கவும், தரமான கல்வியை வழங்கவும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.1 கோடியே 75 லட்சம் செலவில் 28 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக் கப்பட்டுள்ளன. இதன் மூலம் அனைத்து மாநகராட்சி பள்ளி களிலும் சராசரியாக வகுப்பு களுக்கு மாணவர் வருகை, தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.
இத்திட்டத்தைப் பாராட்டி புது டெல்லியில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் குளோ பல் ஸ்மார்ட் சிட்டிஸ் ஃபோரம் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது. விருதை நாகாலாந்து அரசின் உயர் கல்வி, தொழில்நுட்பக் கல்வி மற்றும் பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் டெம்ஜென் இம்னா அலாங் வழங்க, மாநக ராட்சி துணை ஆணையர் (பணி கள்) எம்.கோவிந்தராவ் பெற்றுக் கொண்டார்.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் அ.சு.முருகன், உதவி கல்வி அலுவலர் டி.நளினகுமாரி ஆகி யோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.