

சென்னை பெரம்பூர் செம்பியம் சுந்தர விநாயகர் கோயில் தெருவில் தனியார் குடியிருப்பில் 2 ஆழ்துளை கிணறுகள் முழுமையாக மூடப்பட வில்லை என்று கூறி அப்பகுதி யில் வசிக்கும் ஜெயஸ்ரீ என்பவர் சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சம்பந்தப்பட்ட இடத்தை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை யில், “மனுதாரர் குறைகூறியது போல அப்பகுதியில் உள்ள ஆழ் துளை கிணறுகள் சரிவர மூடப் படாமல் இல்லை. மனுதாரருக்கும் அருகில் உள்ள குடியிருப்பு வாசி களுக்கும் இடையே உள்ள முன் விரோதம் காரணமாக அவர் பொய் யான குற்றச்சாட்டைக் கூறி வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
அதையடுத்து நீதிபதி, விளம் பரத்துக்காக வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள் ளார்.