Published : 16 Nov 2019 07:16 PM
Last Updated : 16 Nov 2019 07:16 PM

டிரான்ஸ்பார்மர் வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த யானைகள்

பிரதிநிதித்துவப் படம்

கோவை,

வனத்துறை அதிகாரிகள் துரத்திச்சென்றபோது மோதியதால் டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் யானைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் தமிழகத்தில் இன்று நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் வனச்சரசத்தைச் சேர்ந்த பகுதிகளில் சில யானைகள் விவசாய நிலங்கங்களுக்குள் அடிக்கடி வந்து துவம்சம் செய்வது வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை அடைந்தனர்.

இன்று அதிகாலை பெரியநாயக்கன் பாளையம் அருகே விவசாய நிலங்களுக்குள் யானை வந்துள்ளது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாலை 4 மணி அளவில் வனத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்றனர். விவசாய நிலங்களுக்குள் ஒரு குட்டி உள்பட 4 யானைகள் இருந்தன.

அப்போது, நிலப்பகுதிகளை நாசம் செய்துகொண்டிருந்த யானைகளை வனத்துறை அதிகாரிகள் பட்டாசுகளை வெடித்தபடி துரத்திச் சென்றனர். இதனால் யானைகள் மிரண்டு ஓடின. யானைகள் ஓடிய வழித்தடத்தில் டிரான்ஸ்பாரம் ஒன்று இருந்துள்ளது.

கூட்டமாக சென்ற யானைகளில் ஒன்று டிரான்ஸ்பாரத்தில் மோதியது. இதனால் மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த அந்த டிரான்ஸ்பாரம் தீப்பிழம்புகள் தெறிக்க வெடித்தது. எனினும் யானைகள் அங்கிருந்து படுவேகமாக தப்பித்து காட்டுக்குள் ஓடி மறைந்தன.

டிரான்ஸ்பாரம் வெடித்தாலும் யானைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x