

ஆம்பூர் கலவர வழக்கில் சஸ் பெண்ட் ஆன காவல் ஆய்வாளர் மார்ட்டீன் பிரேம்ராஜை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேலூர் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.
ஆம்பூரைச் சேர்ந்த இளைஞர் ஷமீல் அஹமது மரணத்தையடுத்து பள்ளிகொண்டா காவல் ஆய் வாளர் மார்ட்டீன் பிரேம்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கலவர வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது மார்ட்டீன் பிரேம்ராஜ் தலைமறைவானார். அவரை சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்நிலையில், மார்ட்டீன் பிரேம் ராஜ் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக் கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டம், பாண்டியபுரம் வனசர கத்துக்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் மான் வேட்டையாடிய போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆய்வாளர் மார்ட்டீன் பிரேம் ராஜும், அவரது நண்பர்கள் கிறிஸ் டோபர், கோபாலகிருஷ்ணன், அய்யப்பன் ஆகியோர் வனத்துறை யினரால் கைது செய்யப்பட்டனர்.
சிபிசிஐடி போலீஸ் விசார ணைக்கு பயந்து, தென்மாவட்டத் தில் நண்பர்கள் பாதுகாப்பில் பதுங்கியிருந்த மார்ட்டீன் பிரேம் ராஜ், அங்கு மான் வேட்டையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நால்வரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து ஆம்பூர் ஷமீல்அஹ்மது வழக்கு தொடர் பாக மார்ட்டீன் பிரேம்ராஜை சிபிசிஐடி போலீஸார் கைது செய் தனர். பாளையங்கோட்டையில் இருந்து வேலூர் சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் நேற்று காலை மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, மாஜிஸ்திரேட் ரேவதி முன்னிலையில் மார்ட்டீன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் ரேவதி, 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து, விசாரணைக்காக மார்ட்டீன் பிரேம்ராஜை சிபிசிஐடி போலீஸார் அழைத்துச் சென்றனர்.