Published : 16 Nov 2019 08:23 AM
Last Updated : 16 Nov 2019 08:23 AM

மாதவ் நீரிழிவு நோய் மையம் சார்பில் நீரிழிவு நோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

உலக நீரிழிவு நோய் நாளை ஒட்டி ரோட்டரி இன்டர்நேஷனல், மாதவ் நீரிழிவு நோய் மையம், சென்னை ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தின. அண்ணாநகர் போகன்வில்லா பூங்காவில் தொடங்கி மாதவ் நீரிழிவு நோய் மையம் வரை இப்பேரணி நடைபெற்றது. இதில் வள்ளியம்மாள் பள்ளி மாணவ, மாணவிகள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்திய ஆராய்ச்சியில் இந்தியாவில் 6-ல் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. அதே எண்ணிக்கையில் தமக்கு நீரிழிவு நோய் இருப்பதை அறியாதவர்களும் உள்ளனர். இதுகுறித்து மாதவ் நீரிழிவு மையத்தின் மூத்த மருத்துவர் எம்.சி.தீபக் கூறும்போது, “நீரிழிவு நோய் இல்லா பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கும் தற்போது இந்நோய் வருகிறது.

அதிக மன அழுத்தம், குறைந்த தூக்கம், சுகாதாரமான உணவுகளை உண்ணாமை ஆகியவற்றால் இந்நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க வாரத்தில் 300 மணி நேரம் நடைப்பயிற்சி செய்தும் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைத்தும் புகைபிடிக்காமலும் இருக்க வேண்டும். இதன் மூலம் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய்களை தள்ளிப்போடவோ, தடுக்கவோ முடியும்” என்று கூறினார்.

உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு நாளை ஒட்டி மாதவ் நீரிழிவு மையத்தில் ரத்த சரக்கரை அளவு பரிசோதனை, சிறுநீரகம், இசிஜி பரிசோதனைகள் வரும் நவ. 30-ம் தேதி வரை இலவசமாக செய்யப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x