செங்கல்பட்டு தடத்தில் நாளை பராமரிப்பு பணி நடப்பதால் 28 மின் ரயில் சேவையில் ஒரு பகுதி ரத்து

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கூடுவாஞ்சேரி அருகே தண்டவாளப் பராமரிப்புப் பணி நாளை (நவ. 17) நடக்கவுள்ளதால் 28 மின்சார ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை கடற்கரை - செங்கல்பட்டு அதிகாலை 3.55, 4.35, 5.15, 5.55 காலை 6.42, மதியம் 2.45 மணி மற்றும் அரக்கோணம் மதியம் 12.50 மணி மின்சார ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 11, 11.50, மதியம் 12.30, 1, 1.45, திருமால்பூருக்கு மாலை 3 மணி ரயில்களின் சேவையிலும் தாம்பரம் - காட்டாங்கொளத்தூர் வரையில் ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை அதிகாலை 3.55, 4.35, 4.50, காலை 6.40, 6.55, மதியம் 2.55, மாலை 4.30 மணி ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன. திருமால்பூர் - சென்னை கடற்கரை காலை 10.40 மற்றும் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மதியம் 12.20, 1, 1.50, 2.25, மாலை 3.05, 3.45 மணி ரயில்களின் சேவையில் காட்டாங்குளத்தூர் - தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

சிறப்பு ரயில்கள் இயக்கம்மின்சார ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. காட்டாங்கொளத்தூரில் இருந்து செங்கல்பட்டுக்கு மதியம் 12.19, 1.09, 1.49, 2.19, மாலை 3.04, 3.34, 4.19 மணிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதேபோல், செங்கல்பட்டு - காட்டாங்கொளத்தூருக்கு மதியம் 12.20, 1, 1.50, மதியம் 2.25, மாலை 3.05, 3.45 மணிகளிலும், திருமால்பூரில் இருந்து காலை 10.40 மணியில் இருந்தும் காட்டாங்கொளத்தூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in