Last Updated : 16 Nov, 2019 07:51 AM

 

Published : 16 Nov 2019 07:51 AM
Last Updated : 16 Nov 2019 07:51 AM

மேட்டூர் அணை அருகில் இருந்தும் காவிரி நீர் கிடைக்காமல் ஏங்கும் கொளத்தூர் ஊராட்சி விவசாயிகள்

சேலம்

மேட்டூர் அணை அருகில் இருந்தும் பாசனத்துக்கு காவிரி நீர் கிடைக்காமல், கொளத்தூர் பகுதி விவசாயிகள் நிலத்தடி நீரை நம்பியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. பாசன நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் நீரேற்று நிலையம் அமைத்து காவிரி நீரை பாசனத் துக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் 12 மாவட்டங்க ளுக்கு பாசன ஆதாரமாக இருக் கும் மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் இருந்தாலும், அத னால் பெரிய அளவில் சேலம் மாவட்ட விவசாயத்துக்கு பய னில்லை என்பது சேலம் மாவட்ட விவசாயிகளின் குமுறலாக உள் ளது. மேட்டூர் அணையில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள சில கிராமங்களுக்கு, காவிரி நீர் கிடைப்பதில்லை என்பது கொளத் தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம விவசாயிகளின் வேதனையாக உள்ளது.

மாநில எல்லை

மேட்டூர் சட்டப்பேரவை தொகு திக்கு உட்பட்ட கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்கள் பலவும் கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ளன. இக்கிராமங்கள் மேட்டூர் அணையை விட மேடான பகுதியில் இருப்ப தால், இங்குள்ள கிராமங்களுக்கு காவிரி நீரை கால்வாய் மூலமாக கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே, இப்பகுதியில் உள்ள கண்ணாமூச்சி, பூமனூர், செங்கல் மேடு, காரகளம், கணவாய்காடு, நீதிபுரம் உள்ளிட்ட பல கிராமங் களில் கிணற்றுப் பாசனமே விவ சாயத்துக்கு கை கொடுக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் வனப்பகுதியை ஒட்டியுள்ள இக் கிராமங்களில் செழிப்பான மண் வளம் உள்ளது. இதனால், இங்கு நெல், வாழை, கரும்பு, மஞ்சள், மிளகாய் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விளைவிக்கப்படுவதோடு, மா, தென்னை உள்ளிட்ட தோட்டப் பயிர் விவசாயமும் மேற்கொள்ளப் பட்டபோதும், நிலத்தடி நீரை மட்டுமே விவசாயிகள் நம்பியிருக் கும் நிலை உள்ளது.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டு களாக கொளத்தூர் வட்டாரத்தில் போதிய மழை பெய்யவில்லை. இதனால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால், விவசாயம் பாதிக்கப் பட்டது. இதனிடையே, குடிமரா மத்து திட்டத்தின்கீழ் கொளத்தூர் வட்டாரத்தில் உள்ள ஏரிகள், நீர்வரத்து கால்வாய்களில் தூர் வாரப்பட்டிருந்தது. நடப்பு ஆண்டில் தென்மேற்குப் பருவமழை மற்றும் தற்போதைய வட கிழக்கு பருவமழையும் இப் பகுதியில் கைகொடுத்துள்ளது.

இதன் காரணமாக, கொளத்தூர் வட்டாரத்தில் உள்ள பெரிய ஏரிகளான தார்காடு பகுதியில் உள்ள 45 ஏக்கர் பரப்பு கொண்ட செம்மலை ஏரி, தும்பல்காட்டு பள்ளத்தில் உள்ள 45 ஏக்கர் பரப்பு கொண்ட ஏழரைமத்தி ஏரி, நீதிபுரத்தில் உள்ள கொத்தனேரி உள்ளிட்ட பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ளன.

ஏரிகள் நிரம்பியதால், அப்பகுதி யில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கொளத்தூர் வட்டாரத்தில் உள்ள விவசாயக் கிணறுகள் பெரும்பா லானவை நிரம்பி வழிகின்றன. இதனால், அங்குள்ள விவசாயி களும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கொளத்தூர் வட்டார விவசாயிகள் கூறும்போது, “கண்ணுக்கு எட்டும் தொலைவில் மேட்டூர் அணை இருந்தும், அதி லுள்ள காவிரி நீர், எங்கள் நிலத் துக்கு கிடைப்பதில்லை. மேடான பகுதி என்பதால், காவிரி நீர் எங் களுக்கு கானல் நீராகவே இருக் கிறது. இந்நிலையில், அண்மையில் பெய்த மழைதான் எங்களுக்கு கைகொடுத்துள்ளது.

இதனால், அடுத்த ஓராண்டுக்கு எங்களுக்கு கவலையில்லை. எனினும், நிரந் தரத் தீர்வாக மேட்டூர் அணை நீர் தேக்கப் பகுதியில் நீரேற்று நிலை யம் அமைத்து, அதன் மூலம் காவிரி நீரை எடுத்து கொளத்தூர் வட்டார ஏரிகளுக்கு கால்வாய் மூலமாக விநியோகிக்க வேண்டும். இத்திட் டத்தை அரசு செயல்படுத்தினால், ஆண்டு முழுவதும் கொளத்தூர் வட்டாரத்தில் விவசாயம் செழிப் பாக இருக்கும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x