தமிழகத்தில் மேலும் மூன்று புதிய மருத்துவக் கல்லூரிக்கு விரைவில் அனுமதி: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

தமிழகத்தில் மேலும் மூன்று புதிய மருத்துவக் கல்லூரிக்கு விரைவில் அனுமதி: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
Updated on
1 min read

காரைக்குடி

‘‘தமிழகத்தில் நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு புதிய மருத்துவக் கல்லூரிக்கு விரைவில் அனுமதி கிடைக்கும்,’’ என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

காரைக்குடியில் இன்று நடைபெற்ற பாஜக தேசிய செயலர் எச்.ராஜா இல்லத் திருமண விழாவிற்கு வந்திருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் இதனைத் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உள்ளாட்சித் தேர்தல் எப்பொழுது அறிவிக்கப்பட்டாலும் அதை சந்திக்கத் தயாராக உள்ளோம். உள்ளாட்சித் தேர்தல், 2021-ல் நடக்கும் சட்டபேரவைத் தேர்தலில் அதிமுக மகாத்தான வெற்றியை பெரும்.

முதல்வரின் முயற்சியால் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள் கிடைத்துள்ளன. இது வரவேற்கதக்க விஷயம்.

மேலும் நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு புதிய மருத்துவக் கல்லூரி கேட்டு விண்ணப்பித்துள்ளோம். விரைவில் அனுமதி கிடைத்துவிடும்.

விபத்து அதிகம் நடக்கும் இடங்களில் உயிரிழப்பைத் தடுக்க விபத்து காய சிகிச்சை நிலைப்படுத்தும் மையம் உருவாக்கி வருகிறோம்.

இதன் மூலம் தாமதம் தவிர்க்கப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்படும். எய்ம்ஸ் மருத்துவனை கட்டும் பணி எந்தவித தடையுமின்றி குறித்த காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும், என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in