Published : 15 Nov 2019 03:37 PM
Last Updated : 15 Nov 2019 03:37 PM

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி.க்கள் நியமனம்

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சிலருக்குப் பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட பொறுப்புகளுக்கு சில எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் விவரம் முன்பு வகித்த பதவியுடன்...

1. பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு-2 எஸ்.பி. விஜயகுமார், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.(இது புதிதாக உருவாக்கப்பட்ட பொறுப்பு)

2. பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு (திருவள்ளூர்) கூடுதல் எஸ்.பி. தில்லை நடராஜன், எஸ்.பி.யாகப் பதவி உயர்த்தப்பட்டு பொருளாதார குற்ற த்தடுப்புப் பிரிவு-2 சென்னை, எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

3. திருவல்லிக்கேணி துணை ஆணையர் சுகுணா சிங், புதிதாக உருவாகப்பட்ட தென்காசி மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

4. சென்னை கியூ பிராஞ்ச் சிஐடி எஸ்பி தர்மராஜன் மாற்றப்பட்டு, திருவல்லிக்கேணி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

5. மதுரை தலைமையிட எஸ்.பி. மகேஷ், சென்னை கியூ பிராஞ்ச் சிஐடி எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

6. கரூர் தலைமையிட கூடுதல் எஸ்.பி. பாஸ்கரன், எஸ்.பி.யாகப் பதவி உயர்த்தப்பட்டு மதுரை தலைமையிட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

7. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு (சிவகங்கை ) கூடுதல் எஸ்.பி. இளங்கோ, எஸ்.பி.யாகப் பதவி உயர்த்தப்பட்டு தமிழ்நாடு சிறப்பு காவல் படை 6-வது பட்டாலியன் (மதுரை) கமாண்டண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

8. தமிழ்நாடு சிறப்பு காவல் படை 6-வது பட்டாலியன் (மதுரை ) கமாண்டண்ட் டி.ஜெயச்சந்திரன், புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

9. சென்னை பயிற்சி மையப் பிரிவில் இருந்த கூடுதல் எஸ்.பி. மஹாபாரதி, எஸ்.பி.யாகப் பதவி உயர்த்தப்பட்டு சிபிசிஐடி (சென்னை) சைபர் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

10. சிபிசிஐடி (சென்னை) சைபர் பிரிவு எஸ்.பி.சாமுண்டீஸ்வரி, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

11. காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. கண்ணன், புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

12. தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் எஸ்.பி. வேதரத்தினம், எஸ்.பி.யாக பதவி உயர்த்தப்பட்டு திருச்சி நகர (குற்றம் மற்றும் போக்குவரத்து) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

13. திருச்சி நகர (குற்றம் மற்றும் போக்குவரத்து) துணை ஆணையர் மயில்வாகனன், புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

14. சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வர் மணி, சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

15. சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்.பி. ராதாகிருஷ்ணன், சென்னை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

16. சென்னை பாதுகாப்புப் பிரிவு எஸ்பி எம்.சுதர்சன், சென்னை காவலர் பயிற்சி கல்லூரி முதல்வராக மாற்றப்பட்டுள்ளார்.

மேற்கண்ட உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x