5 ஆண்டுகளுக்கு பின் காமராசர் பல்கலையில் பேராசிரியர் பணியிடம் நிரப்ப நவடிக்கை: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

5 ஆண்டுகளுக்கு பின் காமராசர் பல்கலையில் பேராசிரியர் பணியிடம் நிரப்ப நவடிக்கை: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது
Updated on
1 min read

மதுரை

மதுரை காமராசார் பல்கலையில் 5 ஆண்டுகளுக்கு பின் பேராசிரியர் பணியிடம் நிரப்ப நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், உயர்கல்வி பயிலும் தென்தமிழக மாணவர்களுக்கு முக்கியமானது. 1965-ல் மாநில பல்கலைக்கழகமாக தோற்றுவிக்கப்பட்டு செயல்படுகிறது.

2005-ல் க ற்பித்தல், சிறந்த ஆராய்ச்சிக்கென ஆற்றல் சார் பல்கலையாக அங்கீகரிக்கப்பட்டது. தேசிய தர மதிப்பீட்டு குழுவால் ‘ ஏ ’ தரம் வாங்கியது. 2019-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் 45-வது இடத்தில் உள்ளது.

இப்பல்கலையில் 20 புலங்கள் (துறை), 44 முது கலை படிப்புகள், 38 இளம்நிலை ஆராய்ச்சி (எம்பில்) படிப்புகள், 45 பிஎச்டி துறை, பட்டயம், சான்றிதழ் படிப்புக்கென 13 துறைகளும் செயல் படுகின்றன. துணைவேந்தர்களாக இருந்த கற்பக குமாரவேல், கல்யாணி மதிவாணன் காலத்தில் உதவிபேராசிரியர், ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்கள் நிரப்பினர்.

2014க்கு பிறகு நிரந்தர பணிக்கான காலியிடங்கள் முறையாக நிரப்பப்படவில்லை. இது போன்ற சூழலில் மாணவர்கள் பாதிக்கும் சூழலிலும், அலுவலகங்களில் பணிச் சுமையை கருத்தில் கொண்டும் புதிய நியமனங் களுக்கான நடவடிக்கை தற்போதைய துணை வேந்தர் மேற்கொண்டுள்ளார்.

பணி நியமனக்குழு அமைப்பது தொடர்பாக பல்கலை சிண்டிக்கேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் புதிய நியமனத்திற்கான அறிவிப்பு வெளியாகலாம் என, தெரிகிறது. இதன்மூலம் பல்கலையின் தரம் உயரும் என, பல்கலை நிர்வாகி தெரிவிக்கிறது.

இது குறித்து பேராசிரியர்கள் கூறியது:

பல்கலையிலுள்ள 20 புலங்களிலும் பெரும் பாலான துறைகளில் உதவி பேராசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. அலுவலகங் களிலும் உள்ளன. தேசிய தரமதிப்பீட்டுக் குழு விரைவில் ஆய்வுக்கு வரும் சூழலில் இந்த காலியிடங்களை நிரப்ப பல்கலை நிரவாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

என்றாலும், வெளிப்படை தன்மையோடு, தகுதியானவர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும். பல்கலைக்கு நிரந்தர பதிவாளர் நியமிக்கப்பட்ட பிறகு, அறிவிப்பு வெளியிடலாம் எனத் தெரிகிறது. ஏற்கெனவே துணைவேந்தர்கள், பதிவாளர்களால் நியமிக்கப்பட்டு, 5, 10 ஆண்டுகளை கடந்த தற்காலிக ஊழியர்கள், உதவி பேராசிரியர்களை கருத்தில் கொண்டு, முன்னுரிமை அளிக்கவேண்டும். என்றனர்.

துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் கூறுகையில், ‘‘ இப்பல்கலையில் பல்வேறு துறைகளில் 151 உதவி பேராசிரியர்கள், 300 ஆசிரியர் அல்லாத காலிபணியிடங்களை நிர்ப்ப நடவடிக்கை எடுத் துள்ளோம். ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு 20 ஆண்டுக்கு பிறகு ஆட்களை நியமிக்க, நடவடிக் கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தகுதியின் அடிப் படையில், நேர்மையாக, வெளிப்படை தன்மை யுடன் நியமனம் இருக்கும். பல்கலை தற்காலிக பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்தும் பரிசீலிக்க திட்டமிடுவோம். புதிய நியமனத்தால் பல்கலையின் கல்வித் தரம் உயரும். தரமதிப்பீட்டிலும் நல்ல இடத்தை பெறுவோம்,’’ என்றார்.

- என்.சன்னாசி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in