மானாமதுரையில் மின்தடையால் இருளில் மூழ்கிய அரசு மருத்துவமனை: பல மணி நேரம் தவித்த தாய்மார்கள், குழந்தைகள் 

மானாமதுரையில் மின்தடையால் இருளில் மூழ்கிய அரசு மருத்துவமனை: பல மணி நேரம் தவித்த தாய்மார்கள், குழந்தைகள் 
Updated on
1 min read

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானா மதுரை அரசு மருத்துவமனை மின்தடையால் பல மணி நேரம் இருளில் மூழ்கியது. இதனால், பிரசவித்த தாய்மார்கள், குழந்தைகள் சிரமமடைந்தனர்.

மானாமதுரை அரசு மருத்துவமனையில் தினமும் 300-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். உள்நோயா ளிகளாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். மகப்பேறு வார்டு தனி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நேற்றுமுன்தினம் 5 பேருக்கு பிரசவம் நடந்தது.

இந்நிலையில் மாலை 4 மணிக்கு மகப்பேறு கட்டிடத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் பிரசவித்த தாய்மார்களும், குழந்தைகளும் வியர்வை, கொசுக் கடியால் சிரமப்பட்டனர். மேலும் இருட்டாகவும் இருந்ததால் பிறந்த குழந்தைகளுடன் உறவினர்கள் வரண்டாவில் காத்திருந்தனர். இரவு 8 மணி வரை மின்சாரம் வராத தால் தாய்மார்களின் உறவி னர்கள் மருத்துவமனை நிர்வாகத் தினரிடம் முறையிட்டு வாக்குவா தத்தில் ஈடுபட்டனர். பலமுறை முயன்றும் மின் பழுதை சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து இரவு 8:45 மணிக்கு உள்நோயாளிகள் பிரிவுக்கு பிரசவித்த தாய்மார்கள், குழந்தைகள் மாற்றப்பட்டனர்.

அதன்பிறகு ஜெனரேட்டர் இயக்கப்பட்டு, இரவு 11.30 மணிக்கு பழுது சரி செய்யப்பட்டது.

இதேபோல் அந்தக் கட்டி டத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவ தாக புகார் எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவ மனைகளில் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in