Published : 15 Nov 2019 10:12 AM
Last Updated : 15 Nov 2019 10:12 AM

5 புதிய மாவட்டங்களை நவம்பர் 29-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார் 

சென்னை

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப் பட்டுள்ள செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை வரும் 29-ம் தேதி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் ஏற்கெனவே 32 மாவட்டங்கள் உள்ளன. தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு, நெல்லை மாவட்டத் தைப் பிரித்து தென்காசி, விழுப் புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத் தூர் என 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த 5 மாவட்டங்களுக்கான எல் லைகளை வரையறை செய்ய தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் வருவாய் நிர்வாக ஆணையருடன் இணைந்து மக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தினர். அதன் அடிப்படையில் புதிய மாவட்டங்களுக்கான தாலு காக்கள் மற்றும் எல்லைகளை வரையறுத்தனர். இதையடுத்து, இந்த 5 மாவட்டங்களின் எல்லை வரையறை தொடர்பாக நேற்று முன்தினம் அரசாணை பிறப்பிக்கப் பட்டது.

இதற்கிடையே, புதிய மாவட்டங் களுக்கான ஆட்சியர் அலுவலகங் கள், தற்காலிகமான இடத்தில் செயல்படும் என்றும், ஆட்சியர் அலுவலகம் கட்ட இடங்களை தேர்வு செய்யும்படியும் தனி அதி காரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. புதிய மாவட்டங்களில் பணியாற்ற விரும்பும் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு அப்பணி கள் முடிவடைந்துள்ளன. தற் போது புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் வாகன நிறுத்த வசதிகளுடன் தலா ரூ.30 கோடி செலவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 5 புதிய மாவட் டங்களை வரும் 29-ம் தேதி முதல்வர் பழனிசாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்து, ஆட்சியர் அலுவலகங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அதே நேரத்தில் புதிய மாவட்டங்களை நேரில் வந்து தொடங்கி வைக்கும்படி முதல்வரிடம் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x