Published : 15 Nov 2019 08:46 AM
Last Updated : 15 Nov 2019 08:46 AM

சபரிமலை சீசனை முன்னிட்டு 64 சொகுசு பேருந்துகள் இன்றிலிருந்து இயக்கம்: விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு விழாக்களின் போது, தமிழக பக்தர்கள் சென்று வர வசதியாக தமிழகத் தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்கு வரத்துக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல, இந்த ஆண்டும் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து நவம்பர் 15-ம் தேதி (இன்று) முதல் ஜனவரி 20-ம் தேதி வரை சிறப்பு சொகுசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் இருந்து 55, திருச்சி, மதுரை, புதுச்சேரியில் இருந்து தலா 2 பேருந்துகள், தென்காசியில் இருந்து 3 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பக்தர் கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒவ்வொரு நாளும் பேருந்து கள் இயக்கப்படும்.

இந்த சிறப்பு பேருந்து களுக்கு www.tnstc.in, ww.red bus.in., www.busindia.com, www.makemytrip.com உள் ளிட்ட இணையதளங்கள் மூலம் 60 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 9445014412, 9445014416, 9445014450 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x