

ஜோலார்பேட்டை
ரயிலில் பயணம் செய்த சென்னை தலைமைச் செயலக ஊழியரை தாக்கியதாக ரயில்வே உணவக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் லட்சுமணன் (30). இவர், சென்னை தலைமைச் செயலகத்தில் புகைப்பட கலை ஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பெங்களூரு வரை செல்லும் விரைவு ரயிலில் பொது வகுப்புப்பெட்டியில் பயணம் செய்தார்.
ஜோலார்பேட்டை ரயில் நிலைய உணவகத்தில் வேலை செய்து வரும் பேரணாம்பட்டு அடுத்த நெக்குந்தி மேட்டுப்பகு தியைச் சேர்ந்த சாதிக் (36) என்பவர், பொது வகுப்புப்பெட்டியில் பயணிகளுக்கு உணவு வகை களை விற்பனை செய்ய வந்தார்.
வாய்த் தகராறு
அப்போது, வழியில் நின்றிருந்த லட்சுமணன் மீது சாதிக் மோதிய தாக கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சாதிக் பயணிகள் முன்னிலையில் லட்சுமணனை சரமாரியாக தாக்கியதாக தெரி கிறது.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் லட்சுமணன் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து உணவக ஊழியர் சாதிக்கை கைது செய்து விசாரித்து வரு கின்றனர்.