Published : 15 Nov 2019 08:05 AM
Last Updated : 15 Nov 2019 08:05 AM

விசாரணை கைதியை சுட்டுக் கொன்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு ஆயுள் தண்டனை

காளிதாஸ்

ராமநாதபுரம்

விசாரணைக் கைதியை காவல் நிலையத்தில் வைத்து சுட்டுக் கொன்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த அல்லா பிச்சை மகன் செய்யது முகம்மது(24). மோட்டார் சைக் கிள் மெக்கானிக்கான இவர் மீது ஒருவர் திருட்டு புகார் அளித்திருந்தார். இது குறித்து விசாரிக்க எஸ்.பி.பட்டினம் போலீஸார் 14.10.2014-ல் செய்யது முகம்மதுவை போலீஸ் நிலை யத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது அவரை சப்-இன்ஸ் பெக்டர் காளிதாஸ்(36) தாக்கி யும், தனது துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தார்.

இது குறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் எஸ்ஐ மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வலியுறுத்தி செய்யது முகம்மது தரப்பில் உயர் நீதிமன்ற கிளை யில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் 16.10.2014-ல் உத்தரவிட்டது. இந்த வழக்கை ராமநாதபுரம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்து, காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து காளிதாஸ் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஜாமீனில் வெளியே வந்த எஸ்.ஐ. காளிதாஸ், உயர் நீதி மன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்து பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, மீண்டும் பணி யில் சேர்ந்தார். தற்போது மதுரை மாவட்டக் குற்றப்பிரிவு ஆவணக் காப்பகத்தில் சப்-இன்ஸ் பெக்டராகப் பணிபுரிகிறார்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம், காவல் நிலை யத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றவரை, துப் பாக்கியால் சுட்டுக் கொன்ற சப்-இன்ஸ்பெக்டர் காளிதாசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

மேலும் அபராதம் கட்டத் தவறினால் ஓராண்டு சிறை தண் டனையும், அத்துமீறி காவல் நிலை யத்தில் அடைத்து வைத்ததற்காக 6 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார். இதைக் கட்டத் தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறை தண் டனை அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தார். ரூ.2 லட் சம் அபராதத் தொகையை எஸ்.ஐ. காளிதாஸிடம் வசூலித்து, செய்யது முகம்மதுவின் தாய் செய்யதலி பாத்திமாவிடம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x