Published : 15 Nov 2019 08:01 AM
Last Updated : 15 Nov 2019 08:01 AM

குழந்தைகளுக்கு கற்பனையை கொடுங்கள்: பால சாகித்ய புரஸ்கார் விருது விழாவில் வைரமுத்து வலியுறுத்தல்

‘பால சாகித்ய புரஸ்கார் 2019 விருது’ வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்குபெற்ற சாகித்ய அகாடமி தலைவர் சந்திரசேகர கம்பார், துணைத் தலைவர் மாதவ் கவுசிக், செயலாளர் கே.னிவாசராவ், கவிஞர் வைரமுத்து மற்றும் பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் பெற்ற எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் | படம்: க.ஸ்ரீபரத்

சென்னை

‘குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பதைவிடக் கற்பனையைக் கொடுங்கள்’ என்று சென்னையில் நேற்று நடைபெற்ற பால சாகித்ய புரஸ்கார் 2019 விருது வழங்கும் விழாவில் கவிஞர் வைரமுத்து வலியுறுத்தினார்.

குழந்தை இலக்கியத்தைப் படைக்கும் சிறந்த எழுத்தாளர் களுக்கு பால சாகித்ய புரஸ்கார் 2019 விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற் றது. சாகித்ய அகாடமி செயலாளர் கே.னிவாச ராவ் வரவேற்றார். சாகித்ய அகாடமியின் தலைவர் சந்திரசேகர கம்பார் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து பேசியதாவது:

குழந்தை இலக்கியத்துக்காக பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற இந்திய படைப்பாளிகள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இங்கே ஒரே கூரையின்கீழ் இந்தியா அமர்ந்திருக்கிறது. சாகித்ய அகாடமி எனும் தங்கச் சங்கிலியால் தான் இப்படி 23 மொழிகளையும் இழுத்துக்கட்ட முடியும். இந்தியா வின் நிலவியலையும், உளவியலை யும் ஒன்றிணைத்த சாகித்ய அகாடமிக்கு இந்தியப் பண்பாட்டு உலகம் கடமைப்பட்டிருக்கிறது.

சிறுவர் இலக்கியம்தான் ஒரு குழந்தையின் முதல் கல்வி. தாய் மொழியின் ஒலிதான் ஒரு குழந்தை யின் முதல் சங்கீதம். சிறுவர் இலக்கியத்தில்தான் தொடங்கு கிறது ஒரு தலைமுறையின் நேர் கோடு. குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பதைவிட கற்பனையைக் கொடுங்கள். அக்கற்பனையின் முதல் வித்து சிறுவர் இலக்கியம் தான். இந்தியாவின் அனைத்துப் பள்ளிகளிலும் சிறுவர்களுக்கென தனியாக நூலகம் அமைக்க வேண் டும். கண் வழியாக மட்டுமல்ல காது வழியாகவும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

குழந்தை இலக்கியத்தில் சிறந்த படைப்புக்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, சம்ஸ்கிருதம் உட்பட 23 மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. இவ்விழாவில், சாகித்ய அகாடமி தலைவர் சந்திரசேகர கம்பார், விருதாளர்களுக்கு மலர் மாலை, சால்வை அணிவித்து, ரூ.50 ஆயிரத் துக்கான காசோலை மற்றும் விரு தினை வழங்கினார். தமிழ் மொழி யில் தமிழ் ஆசிரியை தேவி நாச்சி யப்பன் உட்பட 21 எழுத்தாளர்கள் விருது பெற்றனர். நிறைவில், சாகித்ய அகாதெமி துணைத்தலை வர் மாதவ் கவுசிக் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x