உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் முனைப்பில் ஈடுபட்டிருந்த ஆணையச் செயலாளரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?- ஸ்டாலின் விமர்சனம்

உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் முனைப்பில் ஈடுபட்டிருந்த ஆணையச் செயலாளரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?- ஸ்டாலின் விமர்சனம்
Updated on
1 min read

தமிழக தேர்தல் ஆணையச் செயலரை திடீரென மாற்றியது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையச் செயலாளர் பழனிச்சாமியை, திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன்? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் "விசுவாசமாகப்" பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா?

இது, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடவா? அல்லது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரை ஒட்டுமொத்தமாகத் தில்லுமுல்லுகளில் ஈடுபடுத்தவா?” .

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in