தேமுதிக போராட்டம்: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது

தேமுதிக போராட்டம்: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது
Updated on
1 min read

மதுவிலக்கை வலியுறுத்தி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று மாலை நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தின்போது ஆயிரக்கணக்கானோர் கைது செய் யப்பட்டனர்.

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக்கோரி தேமுதிக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்க வில்லை. அதையும் மீறி தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய மண்டலத்தில் 1,467 பேர்

திருச்சி மாவட்டத்தில் திருச்சி, முசிறி, மணப்பாறை ஆகிய இடங் களில் நேற்று மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட 394 பேர் கைது செய்யப்பட்டனர். விஜய காந்த் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து முசிறியில் சாலை மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல தஞ்சாவூர் மாவட் டத்தில் தஞ்சை, கும்பகோணத்தில் 174 பேர், திருவாரூர் மாவட்டத்தில் 118 பேர், நாகை மாவட்டத்தில் 215 பேர், கரூரில் 187 பேர், பெரம்பலூரில் 78 பேர், அரியலூரில் 86 பேர், புதுக்கோட்டையில் 185 பேர் என மத்திய மண்டலத்தில் மொத்தம் 1,467 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், ஆற்காடு, ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் தடையை மீறி நடந்த போராட்டத்தில் ஈடுபட முயன்ற 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரத்தில் மாவட்ட தேமுதிக செயலாளர் வெங்கடேசன் எம்எல்ஏ உட்பட 343 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற தேமுதிகவினர் மொத்தம் 845 பேர் கைது செய் யப்பட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மொத்தம் 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலத்தில் 75 பேரும், கிருஷ்ணகிரியில் 106 பேரும், ஈரோட்டில் 206 பேரும் கைது செய்யப்பட்டனர்.

திருச்செங்கோடு எம்.எல்.ஏ. சம்பத்குமார் உள்பட 120 பேர் நாமக்கல்லில் கைது செய்யப்பட்டனர். தருமபுரியில் போராட்டம் தொடங்கியபோது மாவட்டச் செயலாளர் இளங் கோவன் மயங்கி விழுந்தார். அப்போது காவல்துறையினருடன் கட்சியினர் வாக்குவாதம் செய்தனர். பின்னர் இளங்கோவன் உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை, திண்டுக்கல்லில்..

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருது நகர் ஆகிய 6 மாவட்டங்களில் தேமுதிகவினர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இவர்களில் 1000 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in