மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - சிவசேனா -தேசியவாத காங்கிரஸ் இன்னும் ஒரு வாரத்தில் ஆட்சி அமைக்கும்: நாராயணசாமி

நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
Updated on
1 min read

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு வாரத்தில் ஆட்சி அமைக்கும் என்று நேரு பிறந்த நாள் விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (நவ.14) நேரு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று நேரு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்பு அவர் பேசுகையில், மக்களை பாஜக ஏமாற்ற முடியாது எனவும் பாஜகவின் வெளி வேஷத்தை மக்கள் உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி இன்னும் ஒரு வாரத்தில் ஆட்சி அமைக்கும் என்றார்.

மகாராஷ்டிராவில் ஆளுநரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சி நேற்று முன்தினம் அமல் செய்யப்பட்டது. ஆளுநரின் முடிவை எதிர்த்து சிவசேனா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி இன்னும் ஒரு வாரத்தில் ஆட்சி அமைக்கும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

செ.ஞானபிரகாஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in