வெப்பச்சலனம்; தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம்; தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
Updated on
1 min read

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு, என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமைய தகவல்:

“தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசானதுமுதல் மிதமான மழைப் பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெய்த மழையின் அளவு ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் மற்றும் பல்லமோர்குலம் என்ற இடத்தில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலையாக 34°செல்சியஸ் இருக்கும். குறைந்தபட்சமாக 25°செல்சியஸ் இருக்கும்”.

என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in