

நடிகர் அதர்வா மீது சினிமா தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ரூ.6.10 கோடி மோசடி புகார் அளித்துள்ளார்.
மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா. இவர் மீது வளசரவாக்கத்தைச் சேர்ந்த பட நிறுவன உரிமையாளரான மதியழகன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:
இ.டி.சி. எக்டேரா என்டர்டெயின்மெண்ட் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நடிகர் அதர்வாவால் பண நஷ்டம் அடைந்துள்ளேன். அவரால் ஏமாற்றப்பட்ட மற்றும் நஷ்டம் அடைந்த தொகை ரூ.6 கோடியே 10 லட்சம் பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்.
மேலும் என்னிடம் நம்பிக்கை மோசடி மற்றும் பண மோசடி செய்துள்ள அதர்வா மீது உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய பணத்தை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்த புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.