

பூரண மதுவிலக்கை அமல்படுத் தக்கோரி, மாநிலம் முழுவதும் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அசம் பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடா மல் தடுக்கும் வகையில் காஞ்சி புரத்தில் நேற்று மாலை 5 மணியள வில் டாஸ்மாக் கடைகள் அடைக் கப்பட்டன.
தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக்கோரி பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து மாநிலம் முழுவதும் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றன. இந்நிலையில், சென்னையின் புறநகர் பகுதிகளான கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், வண்டலூர் மற்றும் மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் அனைத்து கட்சி சார்பில் மதுவிலக்கை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் காஞ்சிபுரம் நகரப்பகுதியில் உள்ள 20 டாஸ்மாக் கடைகள் நேற்று மாலை 5 மணியளவில் மூடப்பட்டன.
இதுகுறித்து, டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் சிலர் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக அரசிடமிருந்து எந்தவிதமான உத்தரவும் வரவில்லை. சென்னை, கலிங்கப்பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது போன்று அசம்பாவி தங்கள் நடந்துவிடாமல் இருக்க முன்கூட்டியே, மாவட்டத்தில் உள்ள 290 கடைகளையும் மூடிவிட்டோம்.
போராட்டத்தின்போது டாஸ்மாக் கடையில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக, 2 நாட்களுக்கு விற்பனையாளர்கள் சுழற்சி முறையில் கடையில் தங்கியிருக்க வேண்டும் என போலீஸார் சில ஆவணங்களில் கையெழுத்து பெற்று சென்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.