மத்திய பாஜக அரசு உறுதியளித்த வளர்ச்சி, முன்னேற்றம், வேலைவாய்ப்புகள் எங்கே? - ஸ்டாலின் கேள்வி

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

ம்த்திய பாஜக அரசு உறுதியளித்த வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்புகள் எங்கே என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

செப்டம்பர் 2019-க்கான தொழில் துறை உற்பத்தி 4.3 சதவீதம் பின்னடைவைக் கண்டிருப்பதாக அதிகாரபூர்வத் தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் தொழில் துறை உற்பத்தி 4.3% உயர்ந்திருந்ததாக, அந்தத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில், தொழில் துறை உற்பத்தி விகிதம் குறைந்துள்ளதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (நவ.12) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "செப்டம்பர் 2019-க்கான தொழில் துறை உற்பத்தி 4.3 சதவீதம் பின்னடைவைக் கண்டிருப்பதாக குறியீட்டுத் தரவுகள் தெரிவிக்கின்றன. பொருளாதார மந்தநிலையின் தீவிரத்தை இது வெளிக்காட்டுகிறது.

தொழில்துறையின் செயல்பாடுகள் தேக்க நிலையை நோக்கி சரிந்து கொண்டிருக்கின்றன.

பாஜக அரசு உறுதியளித்த வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்புகள் எங்கே?

வீழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு தெளிவான பாதையினை வகுத்துள்ளதா?" என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in