

சைதாப்பேட்டையில் இருந்து மே தின பூங்கா வரையிலான மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்ள டெண்டருக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் வரும் 28-ம் தேதி கோயம்பேட்டில் நடக்கவுள்ளது.
சென்னையில் 2 வழித்தடங் களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதில் மே தின பூங்காவில் இருந்து சைதாப் பேட்டை வரையிலான பணிகளை மேற்கொண்ட ‘கேமான்’ நிறுவனம் திடீரென வெளியேற்றப்பட்டது. இதையடுத்து, கேமான் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கிடையே, காலதாமதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ள புதிய டெண்டர் வெளியிட்டுள்ளது. இதனால், சைதாப்பேட்டை மே தின பூங்கா வரையில் சுரங்கம் தோண்டுவது, ரயில் நிலையங்கள் அமைப்பது ஆகிய பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘காலதாமதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சைதாப்பேட்டை மே தினப் பூங்கா இடையே பணிகளை மேற்கொள்ள மீண்டும் புதிய டெண்டர் விடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 22-ம் தேதி டெண்டர் திறக்கப்படுகிறது. அதற்கு முன்ன தாக டெண்டருக்கான முந்தைய கூட்டம் வரும் 28-ம் தேதி கோயம் பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் நடக்க வுள்ளது.
இதில், பல்வேறு நிறுவனங் கள் பங்கேற்கும் என எதிர் பார்க்கிறோம். பங்கேற்கும் நிறுவனங்கள் டெண்டர் அறிவிப் பில் உள்ள விதிமுறைகள், தகவல் களை அறிந்துகொண்டு அவர்களின் கருத்துகளையும் தெரிவிப்பார்கள். அப்போது ஏற்படும் சந்தேகங்கள் குறித்து மெட்ரோ ரயில் அதிகாரி களிடம் ஆலோசனை பெறுவார்கள்’’ என்றனர்.