Published : 12 Nov 2019 08:30 AM
Last Updated : 12 Nov 2019 08:30 AM

பணப்புழக்கம் குறைவு, உத்தரவாதமற்ற வேலை நிலையால் கடும் சரிவை சந்திக்கும் ரியல் எஸ்டேட் தொழில்: 40 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் பாதியில் நிற்கும் அவலம்

டி.செல்வகுமார்

சென்னை

பணப்புழக்கம் குறைவு, உத்தர வாதமற்ற வேலை, வியாபாரம் மந்தம் உள்ளிட்ட காரணங்களால் ரியல் எஸ்டேட் தொழில் கடும் சரிவை சந்தித்துள்ளது.

பொருளாதாரம் மந்தநிலை யால், பணப்புழக்கம் குறைந்து பல் வேறு தொழில்கள் நசிவை சந்தித் துள்ளன. இதில் ரியல் எஸ்டேட் தொழில் பெரும் சரிவை சந்தித் துள்ளது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சொந்த வீடு வாங்க பெரும் தொகை செலவிட வேண்டியுள்ளது. வீட்டின் மாதாந் திர தவணையைவிட வாடகை பலமடங்கு குறைவாக இருப்ப தால் தற்போது பலரும் சொந்த வீடு வாங்க விரும்புவதில்லை.

ஐடி நிறுவன ஊழியர்களும் சம்பளம் குறைவு, எந்த நேரத்திலும் வேலை பறிபோகும் நிலை, வெளி மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் சூழல் என தொடர் நெருக்கடிகளை சந்திக் கின்றனர். இதனால் பலரும் வாட கைக்குதான் செல்கின்றனர்.

பொருளாதார மந்தநிலை

மேலும் கட்டில், பீரோ, டைனிங் டேபிள் உள்ளிட்ட வீட்டு உப யோகப் பொருட்களும் வாடகைக்கு கிடைப்பதால், வீட்டை காலி செய்யும்போது பொருட்களை தூக்கிச் சுமக்க வேண்டிய அவ சியம் இல்லை. இதுபோன்ற வசதி களால் அவர்கள் சொந்த வீடு வாங்குவது பற்றி யோசிப்பது கூட இல்லை.

பொருளாதார மந்தநிலை, ஆன் லைன் வர்த்தகம் போன்றவற் றால் போதிய வியாபாரம் இன்றி வர்த்தகர்களும் வீடு வாங்கும் நிலையில் இல்லை. வீடு, மனை யில் முதலீடு செய்வோரின் எண் ணிக்கை கணிசமாகக் குறைந்து விட்டது. வாங்கி வைத்திருப்பவர் களும் தற்போது விற்கமுடியாத நிலையில் தவிக்கின்றனர். மேலும், ரியல் எஸ்டேட் துறையில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்ய முடி யாத நிலையும் இத்துறையின் பாதிப்புக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய கட்டிட வல்லுநர் சங்க துணைத் தலைவர் எல்.சாந்தகுமார் கூறியதாவது: இந்தியா முழுவதும் குறிப்பாக சென்னை, மும்பை, குர்கான், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் சுமார் 40 லட்சம் வீடுகள் கட்டப் படாமல் பாதியிலேயே நிற்கின்றன.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சிறப்பு கடன் நிதித்திட்டம் யானைப் பசிக்கு சோளப்பொறி போலத்தான் இருக் கிறது. சொத்து வரியை 3 மடங் காக உயர்த்தியது, குடிநீர், கழிவுநீர் கட்டண உயர்வு, மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பத்திரப் பதிவு கட்டண உயர்வு, ஜிஎஸ்டி, பணப்புழக்கம் குறைவு போன்ற வற்றால் ரியல் எஸ்டேட் துறை முன்எப்போதும் இல்லாத அள வுக்கு சரிவை சந்தித்துள்ளது.

வீட்டுக்கான தேவை குறைவு, வங்கிக் கடன் முழுமையாகக் கிடைக்காமை, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய நட வடிக்கை போன்றவற்றால் குறிப் பிட்ட காலத்துக்குள் வீடு கட்டிக் கொடுக்க முடியாமல் தமிழ கத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் இத்தொழிலை கைவிட்டுவிட்ட னர். அரசு போதிய ஊக்குவிப்பு அளிக்காவிட்டால், ரியல் எஸ்டேட் தொழில் அதலபாதாளத்துக்குச் சென்றுவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x