தமிழக மின்சார வாரியத்தின் கடன் ரூ.90 ஆயிரம் கோடியை தாண்டியது: உதய் திட்டத்தில் சேர்ந்த பிறகும் தொடர்ந்து அதிகரிப்பு

தமிழக மின்சார வாரியத்தின் கடன் ரூ.90 ஆயிரம் கோடியை தாண்டியது: உதய் திட்டத்தில் சேர்ந்த பிறகும் தொடர்ந்து அதிகரிப்பு
Updated on
1 min read

சென்னை

உதய் திட்டத்தில் சேர்ந்த பிறகும், தமிழக மின்வாரியத்தின் கடன் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது ரூ.90 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது.

தமிழக மின்வாரியத்துக்கு மின்கட்டணம், அரசு மானியம் என ஆண்டுக்கு ரூ.90 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. எனினும், மின்சார உற்பத்திக்கான எரிபொருள் கொள்முதல், ஊழியர்கள் ஊதியம் உள்ளிட்டவற்றுக்கு மாதம்தோறும் பெரும் தொகை செலவாகிறது.

மேலும், தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் மற்றும் மின்உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டதால் வருவாயைவிட, செலவு அதிகமாக உள்ளது.

இதனால், மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டு கடன் வாங்கும் நிலை ஏற்பட்டது. புதிய மின்திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை. இந்நிலையில், மாநிலமின்வாரியங்களின் நிதி நிலைமையைச் சரிசெய்ய மத்திய அரசுஉதய் திட்டத்தைத் தொடங்கியது.

இத்திட்டத்தின்கீழ், மின்வாரியங்களின் மொத்தக் கடனில் 75சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இத்திட்டம் அறிவிக்கப்பட்ட 2015-ம் ஆண்டு தமிழகமின்வாரியத்தின் கடன் ரூ.81 ஆயிரம் கோடியாக இருந்தது.

உதய் திட்டத்தில் தமிழக அரசு 2017 ஜனவரியில் சேர்ந்தது. இதையடுத்து, மின்வாரியம் அதிக வட்டியில் வாங்கிய கடன் தொகை ரூ.30 ஆயிரம் கோடியில், ரூ.22,815 கோடியை தமிழக அரசு ஏற்றது. மீதித் தொகையை கடன் பத்திரங்கள் வெளியிட்டு நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால், கடன் பத்திரங்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், உதய் திட்டத்தில் சேர்ந்த பிறகு,மின்வாரியத்தின் கடன் தொகைதொடர்ந்து அதிகரித்து தற்போது ரூ.90 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘சென்னையில் வீசிய வார்தா புயல், டெல்டா மாவட்டங்களில் வீசிய கஜா புயல் ஆகியவற்றால் மின்வாரியத்துக்கு ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. இதுதவிர மேலும்பல காரணங்களால் மின்வாரியத்தின் கடன் தொகை அதிகரித்து வருகிறது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in