

கரூர்
கரூரில் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி மயங்கி விழுந்து உயிரிழந் தார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் வடக்கு பசுபதிபாளையத் தைச் சேர்ந்தவர் ஆனந்த். டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வருகிறார். இவரது மகள் கோமதி(17). இவர் கரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இவர் நேற்று காலை பள்ளிக்கு வந்தபோது சோர்வாக இருந்துள்ளார். இதனால், கோமதியை முகம் கழுவி விட்டு வருமாறு ஆசிரியர் கூறியுள்ளார். இதையடுத்து, மாணவி கோமதி கழிப்பறைக்குச் சென்று முகம் கழுவிவிட்டு மீண்டும் வகுப்புக்குள் நுழைந்தபோது மயங்கி விழுந் துள்ளார். உடனடியாக அவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். பின்னர், கோமதியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத் தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த தமிழக போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், எஸ்.பி இரா.பாண்டியராஜன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து விவரங் களை கேட்டறிந்தனர். பின்னர், மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர், மாணவி கோமதிக்கு அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்ட தாலும், இருதயத்திலிருந்து ரத்தத்தை வெளியே எடுத்துச் செல்லும் தமனிசிரையில் ஏற்கெனவே இருந்த பிரச்சினை காரணமாகவும் உயிரிழப்பு ஏற்பட் டதாக மருத்துவர்கள் தெரிவித் ததைத் தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் சடலத்தை பெற்றுக் கொண்டனர்.