

கேளம்பாக்கம்
படூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கு எதிரானபாலியல் சீண்டல்கள் மற்றும் வன்முறைகளை நிறுத்த வலியுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாரத்தான் நேற்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த படூரில், மாற்றத்தை நோக்கி என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலப்பணிகள் செய்யப்படுகின்றன. நேற்று, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் மற்றும் வன் முறைகளை நிறுத்தவும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில், 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நான்கு பிரிவுகளின்கீழ் நடைபெற்ற மராத்தான் ஓட்டத்தை, படூர் பேருந்து நிறுத்தம் அருகே எம்எல்ஏ சுப்ரமணியன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று முதல் இடத்தைப் பிடித்த 4 வீரர்களுக்கு ரொக்கப் பரிசு, பதக்கங்கள் மற்றும் சான்றுகளை, செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி கபீர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் குழந்தைகள் நலவாரிய உறுப்பினர் சாஹீர் முஹம்மது, இளம் சமூக செயற்பாட்டாளர் ஆகாஷ், அறக்கட்டளையின் அறங்காவலர் அசோகன், நிர்வாகிகள் சங்கீதா, சரவணன், சுதா, ஹரிஷ் ஆனந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.