

சென்னை
அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான நிலையில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பல காலமாக பலரது பக்தி, சேவை, விருப்பம், தியாகம், சகிப் புத்தன்மை, உழைப்பு, திறமை மற்றும் அனைத்து பெரியோர் களின் ஆசிகளால் இந்த சூழ் நிலை சமீபத்திருக்கிறது. இந்தப் பணியில் ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள் ஆசியுடன் ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் ஆர்வமும் முயற்சியும் கவனிக்கத்தக் கவை மற்றும் முக்கியமானவை.
மேலும் பாரத தேசம் முழவதும் உள்ள கோயில்கள், குறிப் பாக தென்னாட்டில் உள்ள கோயில்கள், அழகான, ஆசார மான மற்றும் அனுக்ரஹம் வழங் கும் கோயில்களாக வளர்ச்சிய டைவதற்கு அனைவரும் - அரசாங்கம், தனியார் அமைப்புகள் மற்றும் தனிமனிதர்களும் போதிய, உரிய கவனம் செலுத்த வேண்டும். அக்கோயில்கள் நிதி, நியமம் மற்றும் நிர்வாகத்தின் அனுகூலத் துடன் முழுமையான முன்னேற் றம் காண்பதற்கு முயல வேண் டும் என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.