

சேலம்
மேட்டூர் உபரிநீரை முதல்கட்டமாக 100 ஏரிகளில் நிரப்புவதை ரூ.615 கோடி மதிப்பில் செயல்படுத்திட அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங் கப்படும். இத்திட்டம் ஓராண்டில் நிறைவேற்றப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கொங்கணா புரத்தில் முதல்வரின் சிறப்புக் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. முகா மில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி யும், புதிய பணிகளை தொடக்கி வைத்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
தமிழகம் முழுவதும் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்படும் என்ற உத் தரவுப்படி அனைத்து மாவட்டங் களில் உள்ள முதியோர்களுக்கு உதவித்தொகை கிடைக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி யுள்ளோம். உதவித்தொகை பெற சொத்து மதிப்பு ரூ.50 ஆயிரத்துக் குள் இருக்க வேண்டும் என்பதை ரூ.1 லட்சம் வரை சொத்து மதிப்பு உள்ளவர்களுக்கும் உதவித் தொகை வழங்க உத்தரவிடப்பட் டுள்ளது.
உபரிநீர் திட்டம்
மேட்டூர் உபரிநீரை முதல்கட்ட மாக 100 ஏரிகளில் நிரப்புவதை ரூ.615 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்திட வரும் ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்படும். இத்திட்டம் ஓர் ஆண்டு காலத் தில் நிறைவேற்றப்படும். காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத் துக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் அடிக்கல் நாட்டப் படும். இத்திட்டம் பல்வேறு கட்டங் களாக நிறைவேற்றப்படும்.
கரூர், மாயனூர் கதவணையில் இருந்து குண்டாறு வரை இணைக் கின்றபொழுது, உபரிநீர் கால்வாய் வழியாக செல்வதால் புதுக் கோட்டை, சிவகங்கை மாவட்டங் கள் செழிக்கும். வைகை அணை நிரப்பப்பட்டு ராமநாதபுரம், திண் டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் செழிக்கும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், அரசு தலைமைச் செயலர் சண்முகம், வேளாண் துறை செயலர் ககன் தீப்சிங்பேடி, வருவாய் நிர்வாக ஆணையர் ராாதகிருஷ்ணன், எம்எல்ஏ-க்கள் செம்மலை, வெங்க டாஜலம், சக்திவேல், ஏற்காடு சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.