

ச.கார்த்திகேயன்
சென்னை
சென்னையில் அனுமதிக்கப்பட் டதைவிட 4 மடங்கு காற்று மாசு அதிகரித்துள்ளது. ஆனாலும், இதை கட்டுப்படுத்த அரசு துறை கள் எந்த நடவடிக்கையும் எடுக் காதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவானதில் இருந்து, சென்னையை நோக்கி கடல் காற்று வீசுவது நின்றுவிட்டது. மேலும் கடந்த மாதம் சென்னையில் பரவ லாக மழை பெய்ததால், காற்றில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் சாலை களில் உள்ள மண் புழுதி வாகனப் புகை, கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை போன்றவற் றால் வழக்கமாக உருவாகும் நுண் ணிய மாசு ஆகியவை ஈரப்பதத் துடன் சேர்ந்துவிட்டது. கடல் காற்று வீசாததால் அவை நகரவில்லை.
வழக்கமாக தரைமட்டத்தில் இருந்து உயரே செல்லச் செல்ல காற்றின் வெப்பம் குறையும். தற் போது வழக்கத்துக்கு மாறாக தரை யைவிட 700 மீட்டர் உயரத்தில் காற் றின் வெப்பநிலை அதிகரித்துள் ளது. இதன் காரணமாக தரைப் பகுதியில் தங்கியுள்ள ஈரப்பதத் துடன் கூடிய காற்று மாசு மேலெ ழும்ப முடியவில்லை. இதனால் தான் சென்னையில் கடந்த சில நாட் களாக காற்று மாசு அதிகரித்துள்ளது
டெல்லியைவிட அதிகம்
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரி யம் கடந்த 6-ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பின் படி, காற்றில் மிதக்கும் 2.5 மைக்ரான் அளவுள்ள நுண்துகள் சென்னை யில் சராசரியாக ஒரு கனமீட்டர் காற்றில் 224 மைக்ரோகிராம், டெல்லியில் 214 மைக்ரோகிராம் என்று இருந்தது. 7-ம் தேதி பிற் பகல் 12.45 மணி அளவில் சென்னை யில் 270 மைக்ரோகிராம், டெல்லி யில் 267 மைக்ரோகிராம் இருந்தது.
ஒரு கன மீட்டர் காற்றில், 2.5 மைக்ரான் அளவுள்ள நுண்துகள் 60 மைக்ரோகிராம் வரை இருப் பது அனுமதிக்கப்பட்ட அளவு. சென்னையில் அதைவிட 4 மடங் குக்கு மேல் மாசு அதிகரித்துள்ளது. இது மோசமான நிலை என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் அதிகாலை நேரங் களில் எதிரே வரும் வாகனங்கள்கூட தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர். பலருக்கு தொண்டை கரகரப்பு, சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.
மணலி, ஆலந்தூர் பேருந்து நிலையம், வேளச்சேரி ஆகிய பகுதி களில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆன்லைன் காற்று தரக் கண்காணிப்பு மையங்கள் உள் ளன அவற்றில் பதிவான விவரங் களின்படி, முந்தைய நாட்களில் அனைத்து இடங்களிலும் அதிகபட்ச அளவாக 300 மைக்ரோகிராமுக்கு மேல் பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் மாலை வேளச்சேரியில் 375 மைக்ரோகிராம் மாசு பதிவானது. நேற்று காலை 5.37 மணி அளவில் வேளச்சேரியில் 359 மைக்ரோ கிராம், ஆலந்தூரில் 347 மைக்ரோ கிராம், மணலியில் 288 மைக்ரோ கிராம் பதிவானது.
சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு இதுதொடர்பாக எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதுபற்றி சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘‘சென்னையில் காற்று மாசு அதிகரித் திருப்பதாக தமிழக மாசு கட்டுப் பாட்டு வாரியம் எந்த எச்சரிக்கையும் வழங்கவில்லை’’ என்றனர்.
தமிழ்நாடு பேரிடர் மேலாண் மைத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, கேட்டபோது, ‘‘சென்னை யில் மாசு அதிகரிக்கவில்லை. அப்படி இருந்தாலும் இதுபோன்ற நடவடிக்கைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம்தான் எடுக்க வேண்டும்’’ என்றனர்.
தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் வழக்கமான அளவு காற்று மாசுதான் உள்ளது. கடல் காற்று வீசத் தொடங்கினால் சரியாகிவிடும்’’ என்றனர்.
சென்னையில் நிலவும் காற்று மாசு குறித்து வியாசர்பாடியை சேர்ந்த சிலர் கூறும்போது, ‘‘இவ் வளவு மாசு இருப்பதால் காலை நடைபயிற்சிக்கும் போவது இல்லை. இதுதொடர்பாக அரசு இதுவரை எதுவும் அறிவிக்க வில்லை. கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையும் இல்லை. உண்மை நிலையை அரசு தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றனர்.
அதிதீவிரப் புயலாக வலுப் பெற்று வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ‘புல்புல்’ புயல் கரையை கடந்த பிறகு, சென்னை யில் கடல் காற்று வீசத் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு காற்றில் உள்ள நுண் துகள்கள் நகர்த்திச் செல்லப்பட்டு, மாசு குறையும் என்று நம்பலாம்.