கூடங்குளத்தில் 5, 6-வது அணுஉலை 90 சதவீத நில அகழ்வு பணி நிறைவு

கூடங்குளத்தில் 5, 6-வது அணுஉலை 90 சதவீத நில அகழ்வு பணி நிறைவு
Updated on
1 min read

திருநெல்வேலி

கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான நிலம் அகழ்வுப் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அணுஉலை கட்டுமானத்துக்கான கான்கிரீட் பணி தொடங்கும் என்றும் அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கூடங்குளத்தில் தற்போது தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள இரு அணுஉலைகள் மின் உற்பத்தி செய்து வருகின்றன. இங்கு மேலும் 4 அணு உலை கள் அமைத்து, அணுஉலை பூங்காவாக மாற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வரு கின்றன.

அதன்படி, 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் ரூ.39,747 கோடி செலவில், 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. 2017-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி கான்கிரீட் பணி அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் ஒப்புதலுடன் தொடங்கியது. இப்பணி 32 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 3-வது அணு உலையில் 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என்றும் 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 4-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இங்கு ரூ.50 ஆயிரம் கோடியில் 5, 6-வது அணுஉலைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வேகமெடுத்துள்ளன. இந்த இரு அணு உலைகள் அமைப்பதற்கான நில அகழ்வுப் பணி 90 சதவீதம் நிறை வடைந்துள்ளது. இப்பணிகளை சேலத்தைச் சேர்ந்த எஸ்ஆர்சி நிறுவனம் மேற்கொண் டுள்ளது. திட்டமிட்ட காலத்துக்குள் அகழ்வுப் பணி முடிந்து, 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கட்டுமானப் பணி தொடங்கும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது, மின் உற்பத்தி நடந்துவரும் முதல் மற்றும் 2-வது அணுஉலைகளின் செயல்பாட்டில் அவ்வப்போது தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு, மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதை கவனத்தில் கொண்டு, 3,4,5 மற்றும் 6-வது அணுஉலைகளை அமைப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும், அனுபவமுள்ள விஞ்ஞானிகளும், பொறி யாளர்களும், பணியாளர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய உபகரணங்கள்

3, 4-வது அணுஉலைகளுக்கான உபகர ணங்கள் ரஷ்யாவிலிருந்து குறிப்பிட்ட காலத்துக்குள் வந்துசேர, இந்திய அணுசக்தி கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. `மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்த இரு அணுஉலைகளில் 30 சதவீதம் நமது நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்தவும், 5,6-வது அணுஉலைகளில் 50 சதவீதம் இந்திய உற்பத்தி உபகரணங்களைப் பயன்படுத்தவும் இந்திய அணுசக்தி கழகம் திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in