காரைக்குடி அருகே இறப்பிலும் இணை பிரியாத காதல் தம்பதி: கிராமமே திரண்டு அஞ்சலி

காரைக்குடி அருகே இறப்பிலும் இணை பிரியாத காதல் தம்பதி: கிராமமே திரண்டு அஞ்சலி
Updated on
1 min read

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இறப்பிலும் இணை பிரியாத காதல் தம்பதிக்கு அந்த கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

காரைக்குடி அருகே ஆலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அருமைநாயகம் என்ற காசி (81). இவரது மனைவி சரோஜா (79). இருவரும் 60 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமானதில் இருந்தே இருவரும் கூலி வேலையை இணைந்தே செய்து வந்தனர். எப் போதும் இணை பிரியாமல் வாழ்ந்து வந்தனர். அவர்களது 2 மகன்கள், 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டன.

நேற்று சரோஜா திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து மரணம் அடைந்தார். இதைக் கேள்விப்பட்ட 5 நிமிடத்தில் அருமை நாயகமும் இறந்தார். இறப்பிலும் இணை பிரியாத காதல் தம்பதிக்கு அக்கிராமமே அஞ்சலி செலுத்தியது.

இது குறித்து உறவினர்கள் கூறியதாவது: அருமைநாயகமும், அவரது மனைவியும் காதல் தம்பதிக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தனர். அவர்களுக்குள் சண்டை வந்ததை நாங்கள் பார்த்ததே இல்லை. அவர்கள் இறப்பு எங்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அருமைநாயகம் சமூக சேவகராகவும், சீர்திருத்தவாதி யாகவும் இருந்தார். மூன்று முறை எங்கள் கிராமத்துக்கு பெரியார் வந்துள்ளார். அவர் அருமைநாயகத்தின் மகளுக்கு அருமைக்கண்ணு என்றும், மகனுக்கு தொல்காப்பியன் என்றும் பெயர் வைத்தார், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in