மழை குறைந்து குளிர் அதிகரித்துள்ள நிலையில் கொடைக்கானலில் வெளிமாநில பயணிகள்

கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள். படம்: பி.டி.ரவிச்சந்திரன்
கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள். படம்: பி.டி.ரவிச்சந்திரன்
Updated on
1 min read

கொடைக்கானல்

கொடைக்கானலில் மழை குறைந்து, குளிர் அதிகரித்துள்ள நிலையில் வெளிமாநில சுற்று லாப்பயணிகளின் வருகை அதி கரித்துள்ளது.

கொடைக்கானலில் கோடை விடுமுறை காலமான மார்ச் இறுதி முதல் ஜூன் முதல் வாரம் வரை தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். மற்ற மாதங்களில் தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை தினங்களில் மட்டுமே ஓரளவு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் காணப்படும்.

மழைக்காலம் தொடங்கிய பின் பெரும்பாலும் கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் வருகை இருக்காது. இந்த ஆண்டு அக் டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து 10 நாட்கள் கொடைக்கானலில் பலத்த மழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாலையில் சாய்ந்தன. மண்சரிந்து சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காட்டாறுகளிலும், அணைகளிலும் நீர்வரத்து அதிகமாக காணப் பட்டது. கொடைக்கானல் ஏரி முழுவதுமாக நிறைந்து சாலை யில் தண்ணீர் தேங்கியது. சீரமைப்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. பேரிடர் மீட்புக் குழுவினர் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் பகலிலேயே பனிமூட்டம் அதி கமாக காணப்படுகிறது. தூண் பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் அருகில் இருப்போர் கூட கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுகிறது. கோக்கர்ஸ்வாக் பகுதியில் மேகக்கூட்டங்கள் தவழ்ந்து செல்வது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. சாலைகளில் மேகமூட்டம் காணப்படுவதால் வாகனங்களின் முகப்பு விளக் கை எரியவிட்டு குறைந்த வேகத் திலேயே இயக்க முடிகிறது.

அதிக குளிருடன் ரம்மியமான சூழ்நிலை நிலவுவதால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த 2 தினங்களாக அதிகரித் துள்ளது. குறிப்பாக வட்டக்கானல் நீழ்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப் பரித்துக் கொட்டுவதைக் காண சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட் டுகின்றனர்.

கொடைக்கானலில் தற்போது பகலில் வெப்பநிலை அதிகபட் சமாக 16 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்சமாக இரவில் 12 டிகிரி செல்சியசாகவும் உள்ளது. காற்றில் ஈரப்பதம் 79 சதவீதம் இருப்பதால் பகலிலேயே குளிரை உணரமுடிகிறது.

சுற்றுலா வழிகாட்டிகள் சிலர் கூறுகையில், கொடைக்கானலில் பொதுவாக டிசம்பர் இறுதிவரை வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். தற்போதைய குளிரைவிட மிக அதிகமாக குளிர் நிலவும் ஜனவரியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in