Published : 09 Nov 2019 07:44 AM
Last Updated : 09 Nov 2019 07:44 AM

மருந்து உற்பத்திக்கு தேவை அதிகரிப்பால் கண்வலி மூலிகைக் கிழங்கு சாகுபடி தீவிரம்

தளவாய்பட்டணத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கண்வலி மூலிகைக் கிழங்கு.

உடுமலை

வெளிநாடுகளில் மருந்து பயன்பாட்டுக்காக கண் வலி மூலிகைக் கிழங்கு அதிக அளவில் தேவைப்படுவதால், அதன் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

மத்திய அரசு தயாரித்துள்ள அழிந்து வரும் மூலிகைகளின் பட்டியலில் கண்வலி மூலிகைக் கிழங்கும் இடம்பிடித்துள்ளது. மருத்துவ குணம் கொண்ட இந்த கிழங்கு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆடி மாதம் தொடங்கி மாசி மாதத்தில் அறுவடை நடைபெறும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் இதற்கான முக்கியச் சந்தையாக உள்ளது.

தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், சேலம், நாகர் கோவில் உட்பட 12 மாவட்டங்களில் சுமார் 2,500 ஹெக்டேர் பரப்பளவில் கண் வலி கிழங்கு சாகுபடி நடைபெறுகிறது. தாராபுரம் அருகே தளவாய்பட்டணத்தில் பரவலாக கண்வலி மூலிகைக் கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அங்கு சொட்டுநீர் பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டு சுமார் 4 அடி உயரத்தில் வளர்ந்துள்ள கண்வலி மூலிகைக் கிழங்குகள் விரைவில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, ‘வறண்ட நிலத்திலும், விளைச்சல் தரும் கண் வலி மூலிகைக் கிழங்கு, பனி மற்றும் தொடர் மழைக் காலங்களில் பாதிக்கும். ஒரு ஹெக்டேருக்கு 100 முதல் 150 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும். வெளிநாடுகளில் மருந்து தேவைக்காக தமிழகத்தில் இருந்து அதிக அளவில் கொள் முதல் செய்யப்படுகிறது. இடைத் தரகர்கள் வாயிலாக பரிவர்த்தனை நடைபெறுவதால் விவசாயி களுக்கு குறைந்த லாபமே கிடைக்கும் நிலை உள்ளது.

மத்திய அரசால் அங்கீகரிக்கப் பட்ட பயிராக கண்வலி கிழங்கு உள்ளதால், ஒழுங்கு முறை விற் பனைக் கூடத்தின் மூலம் விற்க முடிவதில்லை. அதனால் இடைத் தரகர்களை மட்டுமே நம்பியிருக் கும் நிலை உள்ளது. இருப்பு வைக் கவும், கடன் பெறவும் முடிவதில்லை. மூலிகை கண் வலி கிழங்கை அரசு அங்கீகரிக்க வேண்டும் என அரசுக்கு ஏற்கனவே பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x