Published : 09 Nov 2019 07:40 AM
Last Updated : 09 Nov 2019 07:40 AM

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் ‘தோழி’ திட்டம்: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதளவிலும், உளவியல் மற்றும் சட்ட ரீதியாக ஆலோசனைகளை வழங்கவும், உதவி புரியவும் ‘தோழி’ என்ற புதிய திட்டத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் ஆர்.தினகரன், இணை ஆணையர் விஜயகுமாரி, துணை ஆணையர் ஜெயலட்சுமி, மன நல மருத்துவர் ஷாலினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.படம்: பு.க.பிரவீன்

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு மனதளவிலும், உளவியல் மற்றும் சட்டரீதியாக ஆலோசனைகள் வழங்கவும், உதவி புரியவும் ‘தோழி’ என்ற திட்டத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

பெண்களுக்கு எதிரான பாலி யல் குற்றங்கள் தொடர்பான வழக் குகளில் பாதிக்கப்பட்ட குழந்தை கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மனதளவில் பாதிக்கப்பட்டிருப் பார்கள். அவர்களும் இந்த சமுதாயத்தில் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை மைய மாக வைத்து ‘தோழி’ என்ற ஒரு புதிய திட்டத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட குழந் தைகள் மற்றும் பாலியல் வழக்கு களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாகச் சென்று அவர்களுக்கு மன ரீதியாகவும், உளவியல் ரீதியா கவும், சட்ட ரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனை வழங்க ‘தோழி’ திட்டம் உருவாக்கப்பட்டுள் ளது.

இதற்காக ஒவ்வொரு அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் இருந்தும் 2 பெண் போலீஸார் வீதம் சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் இருந்தும் 70 பெண் போலீஸார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர் களுக்கு அதற்குரிய பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்கள் அளிக்கப் பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குழந் தைகளுக்கு, பெண் போலீஸார் தோழி மாதிரி பழகி உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டத்துக்கும் ‘தோழி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

‘தோழி’ அமைப்பில் செயல்படும் பெண் காவலர்களுக்கு நிர்பயா முத்திரையும், இளஞ்சிவப்பு வண்ண சீருடையும் வழங்கப்பட் டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் ஆர்.தினகரன், இணை ஆணையர் விஜயகுமாரி, துணை ஆணையர் ஜெயலட்சுமி, மனநல மருத்துவர் ஷாலினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x