Published : 09 Nov 2019 07:35 AM
Last Updated : 09 Nov 2019 07:35 AM

ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.200-க்கு பதிலாக ரூ.500 கிடைத்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

சேலம்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பொதுத்துறை வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.200 பணம் எடுக்க முயன்றபோது ரூ.500 கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் காடையாம் பட்டி அருகே உள்ள பண்ணப்பட்டி பிரிவு ரோட்டில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இம்மை யத்தில் மூன்று ஏடிஎம் இயந் திரம் உள்ளன. இந்தப் பகுதி சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் உள்ளதால் 24 மணி நேரமும் கூட்டம் இருக்கும். நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு ஒரு வாடிக்கையாளர் ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.200 எடுக்க முயன்றபோது, ரூ.500 பணம் வந் துள்ளது, ஆனால் வங்கி கணக்கில் இருந்து ரூ.200 ரூபாய் மட்டுமே குறைந்ததாக தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள், இத்தகவலை அலைபேசி மூலமாக நண்பர், உறவினர்களுக்கு பரப்பியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஏடிஎம் மையத்துக்கு பொதுமக்கள் பலரும் திரளாகச் சென்று ரூ.200 பணம் பதிவு செய்து ரூ.500-யை எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் நேற்று முன் தினம் நள்ளிரவு வரை தொடர்ந்துள் ளது. இதுகுறித்து வங்கி அதிகாரி களுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அதிகாரிகள் உடனடியாக ஏடிஎம் மையத்தை மூடினர்.

வங்கி அதிகாரிகள் தொழில் நுட்ப வல்லுநர்களை ஏடிஎம் மையத்துக்கு வரவழைத்து இயந் திரத்தை பரிசோதனை செய் தனர். இயந்திரத்தில் பணம் நிரப்பும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.200 நிரப்ப வேண்டிய இடத்தில் ரூ.500 நிரப்பியதால், இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் விசாரித்ததில் தெரியவந்துள்ளது. இதற்கான நஷ்ட தொகையை ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வங்கி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x