Published : 09 Nov 2019 07:16 AM
Last Updated : 09 Nov 2019 07:16 AM

ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் தாம்பரம் - வேளச்சேரி இடையே இலகு ரயில் திட்டம்: ஆய்வு பணிகள் தொடக்கம்

சென்னை 

சென்னையில் மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரித்து வரு வதால், எல்லையும் விரிவ டைந்து வருகிறது. சுற்றுச் சூழல் பாதிப்பை கட்டுப்படுத் தும் வகையில் பொது போக்கு வரத்து வசதியை மேம்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

சென்னையில் ஒருங் கிணைந்த போக்குவரத்து வசதியை வழங்க மெட்ரோ ரயில் விரிவாக்கம் போன்ற தொலைநோக்கு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளை ஆய்வு செய்து பொது போக்கு வரத்து வசதியை மேம்படுத்த வும் திட்டப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தாம்பரம் - வேளச்சேரி இடையே சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு ரூ.3,500 கோடி மதிப்பில் இலகு ரயில் சேவை (Light Rail Service) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான சாத்தியக்கூறு கள் குறித்து முதல்கட்ட ஆய்வு அறிக்கை தயாரிக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றி சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகளி டம் கேட்டபோது, ‘‘அனைத்து பகுதிகளையும் இணைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப் பட்டு வருகிறது. இதற் கிடையே, தாம்பரம் - வேளச் சேரி பறக்கும் ரயில் சேவையை இணைக்கும் வகையில் இலகு ரயில் சேவை திட்டத்தை தொடங்குவதற்கான சாத்தி யக்கூறுகள் குறித்து ஆய்வு பணிகளை தொடங்கியுள் ளோம். இந்த ஆய்வின் முடிவு களை கொண்டு அடுத்த கட்டமாக விரிவாக திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதன் பிறகு திட்டத்தின் மதிப் பீடு, வழித்தடங்கள் உள்ளிட் டவை இறுதிசெய்யப்படும்’’ என்றனர்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறும்போது, ‘‘சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா உள் ளிட்ட நாடுகளில் பெரிய நகரங் களில் இலகு ரயில் சேவை உள்ளது. இந்தியாவிலும் பெரிய நகரங்களில் இந்த சேவை தொடங்குவது குறித்து ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, சென்னை, கொச்சியில் முதல் கட்ட ஆய்வுகள் நடந்து வரு கின்றன.

சாலையின் அருகிலேயே தண்டவாளம் அமைத்து இந்த வகை ரயிலை இயக்க முடியும். இதனால், பெரிய அளவில் செலவு குறையும். மெட்ரோ ரயில் திட்டத்தை ஒப்பிடும் போது, 40 சதவீதம் செலவை குறைக்க முடியும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x