

உதகை
கோடநாடு கொலை வழக்கின் சாட்சிகள் விசாரணை டிசம்பர் 2-ம் தேதி தொடங்குகிறது.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
குற்றாட்டுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுவிட்டன. இவ்வழக்கின் விசாரணை இன்று வந்த போது சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் நேரில் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பி.வடமலை, ‘வரும் டிசம்பர் மாதம் 2-ம் தேதி சாட்சிகள் விசாரணை தொடங்கும்’ என அறிவித்தார்.
இதற்கு அரசு வழக்கறிஞர் நந்தகுமார், ‘கோடநாடு கொலை வழக்கின் முக்கிய காட்சியும் கொலையை நேரில் கண்டவருமான கிருஷ்ண தாபா நேபாளத்தில் இருக்கிறார்’ என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதி வழக்கை டிசம்பர் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்து, அன்றே சாட்சிகள் விசாரணை தொடங்கும் என்று உத்தரவிட்டார்.
இதற்கிடையே உயர்நீதிமன்றம் சயான் மற்றும் வளையார் மனோஜ் ஆகிய இருவர் மீதும் போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது இதையடுத்து வழக்கறிஞர் சிவக்குமார் அவர்கள் இருவரையும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
ஆர்.டி.சிவசங்கர்