

வருசநாடு
மூலவைகை அருகே யானைகஜம் அருவியில் நீர் வந்து கொண்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்கின்றனர்.
தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ளது உப்புத்துறை. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை இங்குள்ள யானைகஜம் அருவி வழியே செல்கிறது. கடந்த வாரம் கனமழை பெய்ததால் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இங்கு குளிக்க வனத் துறையினர் தடை விதித்தனர். தற்போது மழை குறைந்து தண்ணீர் மிதமாக விழுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டிபட்டி, தேனி, வருசநாடு, கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நேற்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர். உப்புத்துறை மாளிகைப்பாறை கோயில் அருகிலேயே இருப்பதால் அங்கு வரும் பக்தர்களும் இந்த அருவியில் குளித்துவி்ட்டுச் செல்கின்றனர்.