மதுரை அரசு மருத்துவமனையில் அடுக்கடுக்கான பிரச்சினைகள்: புதிய ‘டீன்’னுக்கு காத்திருக்கும் சவால்கள்

சங்குமணி
சங்குமணி
Updated on
2 min read

மதுரை

மதுரை அரசு ராஜாஜி மருத் துவமனையில் புதிகாகப் பொறுப் பேற்றுள்ள ‘டீன்’னுக்கு மருத்து வமனை நிர்வாகப் பொறுப் பிலும், நோயாளிகளுக்குத் தடையின்றி சிகிச்சை வழங்கு வதிலும் பல்வேறு சிக்கல்களும், சவால்களும் உள்ளன.

மதுரை அரசு மருத்துவ மனையில் தற்போது வெளி நோயாளிகள் வருகை 10 ஆயிரத் தைத் தாண்டிவிட்டது. உள் நோயா ளிகளாக 3,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், நோயாளிகள், அவர்களைப் பார் க்க வரும் பார்வையாளர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு போதிய கழிவறை வசதி இல்லை.

கழிவறைகளைச் சுத்தமாகப் பராமரிக்க போதிய நீர் ஆதாரம் இல்லை. மருத்துவமனையின் தேவையில் 40 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள் ளது. அதனால், வார்டு கழி வறைகள், மருத்துவமனை வளாகப் பொதுக்கழிவறைகள் தூர்நாற்றம் வீசுகின்றன. அதுவே மருத்துவமனைக்கு வருவோருக்கு நோயைப் பரப்புகிறது.

மழைநீர் தேங்குவதாலும், கழிவுநீர்க் கால்வாய்கள் உடைப் பால் கழிவு நீர் தேங்கி கொசுத் தொல்லையால் நோயாளிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். அதனால், மருத்துவமனையில் சுகாதாரமான வளாகத்தை உறு திப்படுத்த வேண்டும்.

தற்போது மருத்துவமனையில் பெரும்பாலான கட்டிடங்கள் சிதில மடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. புதிய கட்டிடம் கட்ட திட்டங்கள் அறிவித்தபோதிலும் இதுவரை நிதி ஒதுக்கீடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் நடக்கும் லஞ்சப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குறிப்பாக பிரசவ வார்டில் நிலவும் லஞ்ச கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

மாதாந்திர மரண தணிக்கைக் கூட்டங்கள் முறையாக ஆக்கப்பூ ர்வமாக நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். அப்போது தான் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும். மருந்தாளுநர்கள் போதியளவில் இல்லாததால் ஏற்கெனவே உடல்நலக் குறைவால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்துகள் வாங்க வேண்டிய பரிதாபம் ஏற்படுகிறது.

அதனால், போதிய மருந்தா ளுநர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகள், பார்வையாளர்கள் தங்கள் புகார்கள், குறைகளைத் தெரிவிக்க எளிமையாக அணுகும் வகையில் ‘டீன்’ அலுவலகம் இருக்க வேண் டும்.

கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பாலரெங்காபுரம் மண்டல புற்று நோய் மையத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இடியும் நிலையில் விரிசல் விட்டுள்ள குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடங்களை இடித்துவிட்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி குழந்தைகள் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.

தோப்பூர் நெஞ்சக நோய் மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கான `பேலியேட்டிவ் கேர்' கட்டிடப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.

மல்டி ஸ்பெஷாலிட்டி மருத் துவமனைக் கட்டிடத்தில் திட் டமிட்டபடி வரவேண்டிய அனைத்து சிறப்பு சிகிச்சை வார்டுகளும், அதி நவீன உயிர்காக்கும் சிகிச்சைக் கருவிகள் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கழிவறைகளை அதிகப்படுத்த வேண்டும். மருத்துவமனைக்கு நோய் குணமடையவே மக்கள் வருகின்றனர். ஆனால், மதுரை அரசு மருத்துவமனைக்கு வருவோருக்கு கூடுதலாக நோய்கள் தொற்றும் வகையில் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. இப்பிரச்சினைகள் அனைத்துக்கும் புதிய ‘டீன்’ சங்குமணி தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in